பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அணுக்கரு பெளதிகம் வத்தைக் காட்டுகின்றது. இந்துப்பு என்பது குளோரின், சோடியம் என்ற தனிமங்களாலான ஒரு வேதியியற் கூட்டுப் பொருளாகும். இங்குக் காட்டப்பெற்றுள்ள படத்தில் கரும் புள்ளிகள் குளோரின் அணுக்களையும் (Cl), வெண் புள்ளிகள் சோடிய அணுக்களையும் (Na) உணர்த்துகின்றன. படிகத்தில் அவை ஓர் ஒழுங்கான கோலத்தில் ஒன்றுவிட்டு ஒன்ருக மாறி மாறி அமைந்துள்ளன. உண்மையில் படிகத்தின் வெப்ப நிலைக்கேற்றவாறு இந்த அணுக்கள் தீவிரமான இயக்க நிலை யிலுள்ளன; அவை தம்முடைய சமனிலையின் இருப்பிடங்களை யொட்டி அசைகின்றன. அணுக்களுக்கிடையே சிறிதும் காலியிடமின்றி அடைக்கப்பெற்றிருப்பதால் மேற்காட்டிய மாதிரி உருவம் உண்மை நிலைக்குச் சரியான முறையில் பொருந்தவில்லை. இப்பொழுது எழும் வி ைஇதுதான்: கட்புலனுகுமாறு அமைக்கப்பெற்றுள்ள மாதிரி உருவங்களின் (Models) உண் மைப் பொருள்தான் என்ன? அவற்றைச் சிறிது ஐயத்துடன் தானே நாம் நோக்கவேண்டும்? ஏனெனில், அணுக்கள் சடப் பொருளின் மிகச் சிறிய அலகுகளாக இருப்பதாகக் கொண் டால், நம் அன்ருட அனுபவத்தில் கண்ணுக்குப் புலகைக் கூடிய பொருள்களைப்போல் அவை அமையும் என்று எதிர் பார்த்தற்கில்லை. எடுத்துக்காட்டாக, நாம் எடுத்துக்கொண்ட மாதிரி உருவத்திலுள்ளனபோல் அவை கரும்புள்ளிகளாக வும் வெண்புள்ளிகளாகவும் இருக்குமென்று கருத முடியாது. ஒருவர் அவ்வாறு ஐயங் கொள்ளுவது முற்றிலும் சரிதான்; நாம் சடப்பொருளின் இறுதியான அடிப்படையான பகுதிக் கூறுகளைப்பற்றி ஆராய்ந்து அணுகும்பொழுது நம்முடைய புலன்காட்சியின் (Perception) திறனும் ஒர் எல்லைக்குள் அடங்கிவிடுகின்றது. எனவே, முதலாவதாக நாம் வினவ வேண்டியது இதுதான்: அணுக்களின் சரியான பருமன் என்ன? ஒரு மூலக்கூறினே ஒரு பிலியார்டு பந்து (Billiard ball) அளவு காணப்பெறச் செய்வதற்கு அதனை எந்த அளவு பெருக் கிக் காட்டவேண்டும்? இரண்டாவதாக, நாம் அறிந்து