பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 31 கொள்ள வேண்டியது: கண்ணுக்குப் புலனுகும் இந்த மாதிரி உருவம் எந்த அளவுக்குச் சரியாக உள்ளது? அஃதாவது, அதைக் குறித்து நாம் கருதிய நோக்கம்தான் என்ன? எதிர் காலத்தில் சிறந்த முறையில் அமையவிருக்கும் நுண்பெருக்கி யில் காணவல்ல உண்மையான மூலக்கூறின் விம்பம் (image) இதுதான? அந்த விம்பத்திற்கும் இதற்கும் யாதேனும் நேர் முறையில் கட்புலனுகக் கூடிய குறிப்பு உண்டா? அணுக்களின் பருமன் : முதலில் நாம் அணுக்களின் பருமனப்பற்றிய பிரச் சினையை எடுத்துக்கொள்வோம். எல்லா அணுக்களும் ஒரே மாதிரி பருமன் (Size) உள்ளவையன்று என்பது வெளிப்படை. ஆனல், எல்லா அணுக்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு (Magnitude) உள்ளவை. ஒரு சென்டிமீட்டர் குறுக்களவுள்ள ஒரு பந்தை பூமியளவு காட்டுவதற்கு எந்த அளவு பெருக்கம் வேண்டுமோ, கிட்டத்தட்ட அந்த அளவுதான் ஒர் அணு வினை 10 சென்டிமீட்டர் குறுக்களவுள்ள ஓர் அமைப்பாகப் பெருக்கிக்காட்டுவதற்கும் வேண்டும். இந்த எடுத்துக்காட் டிலிருந்து மூலக்கூறுகளின் அதிநுட்பமான சிறிய தன்மை யைப்பற்றி ஓரளவு தெளிவாக அறிந்துகொள்ளலாம். இரண்டாவது விைைவ, அஃதாவது மூலக்கூறின் மாதிரி உருவத்தின் உட்கருத்தினேக் காண்போம்: அண்மையில் எலக்ட்ரான் நுண்பெருக்கி (Electron microscope) என்ற புதிய தொரு நுண் பெருக்கிஅமைக்கப்பெற்றுள்ளது. சாதாரண ஒளி நுண்பெருக்கி ஒளிக்கதிர்களைப்பயன்படுத்திக்கொள்வதுபோல் இது ஒளிக்கதிர்களைப் பயன்படுத்திக் கொள்வதில்லை; ஆனால், இது எலக்ட்ரான் கதிர்களைப் (Electron rays) பயன்படுத்திக் கொள்ளுகின்றது. இந்த எலக்ட்ரான் நுண்பெருக்கியின் துணையால் ஒளி நுண்பெருக்கியால் அடைவதைவிட மிக அதிகமான பகுப்பாற்றலேயும் மிகப் பெரிய அளவு உருப் பெருக்கத்தையும் அடைதல் முடியும். எனவே, அதன் இன் றைய வளர்ச்சியினைக் கொண்டே பெரிய மூலக்கூறுகளைத்