பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 3.3 கொள்கை'யைக் குறிப்பிட்டாக வேண்டும்; அதிலும் சிறப் பாக, அவகாட்ரோவின் கருதுகோளைச் (Hypothesis) சிந்திக்க வேண்டும். மேலே கூறியவாறு, அவருடைய கருதுகோள் இதுதான்: ஒரே வெப்ப நிலையிலும் அமுக்க நிலையிலும் சம கனபரிமாணமுள்ள எல்லா வாயுக்களிலும் ஒரே எண்ணிக் கையுள்ள மூலக்கூறுகள் அடங்கியுள்ளன என்பது. இந்தக் கருதுகோளிற்குச் சரியான மெய்ப்பிப்பு (Proof) உண்டு; ஆனால், இங்கு நாம் அதனே விளக்கிக் கூறுவதுடன் நிறுத்திக் கொள்வோம். ஒரு வாயுவால் நிரப்பப்பெற்றுள்ள கலத்தின் பக்கங்களிலுள்ள அமுக்கத்திற்குக் காரணம் வாயுவின் மூலக் கூறுகள் தாக்குவதலைாகும்; விடாது பெய்யும் மழைத்துளி கள் போல இந்த வாயுவின் மூலக்கூறுகள் அப்பக்கங்களைச் சம்மட்டி கொண்டடிப்பதுபோல் தாக்கிக்கொண்டே யிருக் கின்றன; அன்றியும், அம் மூலக்கூறுகள் அவற்றிலிருந்து துள்ளிக் குதித்தெழுகின்றன. இந்தத் தாக்குதல்களின் மொத்த விசைகளின் கூட்டுத்தொகைதான் கலத்தின் பக்கங் களில் அமுக்கத்தை உண்டாக்குகின்றது. இந்த அமுக்கத் தின் அளவு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலைப் பொறுத்திருக் கின்றது என்பது வெளிப்படை, மேலும் இயக்க ஆற்றல் (Kinetic energy) வாயுவின் வெப்ப நிலையைப் பொறுத் துள்ளது. ஒரே வெப்பநிலையில் எல்லா வாயுக்களின் மூலக் கூறுகளும் எப்பொழுதும் ஒரே சராசரி இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன என்பதை மாக்ஸ் வெல் காலத்திலிருந்தே நாம் அறிவோம். எனவே, சம கனபரிமாணமுள்ள வாயுக் களில் ஒரே எண்ணிக்கையுள்ள மூலக்கூறுகள் இருந்தால், அதே வெப்ப நிலையில் அவ்வாயுக்களின் அமுக்கமும் ஒரே அளவாகவுள்ளது என்ருகின்றது. அவகாட்ரோவின் கருது கோளின் உண்மைப் பொருளும் இதுதான். அன்றியும், இந்நிலையில் நாம் சில வேதியியல் மெய்ம்மை களையும் (Chemical facts) குறிப்பிடுதல் வேண்டும். வாயு 1 SAGUSTLGgnt-Avagadro. 2 udträsivG)sváj-Maxwell அ-3