பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அணுக்கரு பெளதிகம் நிலையிலுள்ள 2 கிராம் ஹைட்ரஜனும் வாயுநிலையிலுள்ள 16 கிராம் ஆக்ஸிஜனும் சேர்ந்து 18 கிராம் நீராவி உண்டா கின்றது என்று ஏற்கெனவே நாம் குறிப்பிட்டதை அடியிற் கண்ட சமன்பாட்டால் (Equation) உணர்த்தலாம். 2 கிராம் ஹைட்ரஜன் + 16 கிராம் ஆக்ஸிஜன் = 18 கிராம் நீராவி. பொருண்மை விகிதத்திற்குப் பதிலாக ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் வெப்ப நிலையில் சேரும்பொழுது நாம் இந்த விகிதத்தைக் கனபரிமாண அடிப்படையிலும் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, ஒரு விட்டர் ஹைட்ரஜனும் , லிட்டர் ஆக்ஸிஜனும் சேர்ந்து ஒரு லிட்டர் நீராவியர்கின்றன என்ப தைச் சோதனைகள் காட்டுகின்றன. எனவே, நாம் அடியிற் கண்ட சமன்பாட்டை அடைகின்ருேம். 1 லிட்டர் ஹைட்ரஜன் - லிட்டர் ஆக்ஸிஜன்= 1 லிட்டர் நீராவி, இந்த இரண்டு சமன்பாடுகளிலிருந்தும் இந்த மூன்றுவித மூலக்கூறுகளின் பொருண்மை விகிதங்களைப் பகுத்தறிதல் எளிது. எப்பொழுதும் 1 லிட்டர் ஒரே எண்ணிக்கையுள்ள வாயுவின் மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதால், நாம் செய்ய வேண்டிய தெல்லாம் மூன்று வாயுக்களின் மேற் குறிப்பிட்ட பொருண்மைகளின் விகிதத்தையும் கனபரிமாணங்களின் விகிதத்தையும் தீர்மானிக்க வேண்டியதே; இதனால் மூலக் கூறுகளின் பொருண்மை விகிதப் பொருத்தத்திற்கேற்ற எண்கள் கிடைக்கும். எனவே, நாம் கீழ்க்கண்டவற்றை அடைகின்ருேம். ஹைட்ரஜன் வாயு, 2 கிராம் லிட்டர்; ஆக்ஸிஜன் வாயு, 32 கிராம் லிட்டர்; நீராவி, 18 கிராம் விட்டர்.