பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 35 ஆகவே, இப் பிரச்சினையிலுள்ள பல்வேறு மூலக்கூறு களின் சார்புப் பொருண்மைகள் (Relative masses) பின் வருமாறு: ஹைட்ரஜன் வாயு: ஆக்ஸிஜன் வாயு: நீராவி = 2: 32: 18 அனு-எடையும் மூலக்கூறு-எடையும்: இந்த உண்மைகளை யெல்லாம் அடக்கி எளிதாகக் கூறும் கருதுகோள் பிற சோதனைகளாலும் உறுதிப்படுத்தப்பெற் றுள்ளது. இக் கருதுகோள் வருமாறு: ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறில் 1 அணு-எடையைச் கொண்ட இரண்டு ஹைட் ரஜன் அணுக்கள் உள்ளன; ஆகவே, அதன், மூலக்கூறுஎடை 2 ஆகும். அங்ங்னமே, ஓர் ஆக்ஸிஜன் மூலக்கூறில் 16 அணு-எடையைக் கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் அணுக் கள் உள்ளன; ஆகவே, அதன் மூலக்கூறு எடை 32 ஆகும். இறுதியாக, ஒரு நீரின் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்ஸிஜன் அணுவும் உள்ளன; ஆகவே, அதன் மூலக்கூறு-எடை 2 x 1-16=18 ஆகும். இந்தக் கூட்டுப்பொருளே அடியிற் கண்ட வாய்பாட்டால் விவரிக் கலாம்: | H2 + 3 O. = | H .O எல்லாத் தனிமங்களின் அணு-எடைகளையும் எல்லா வேதியியற் கூட்டுப்பொருள்களின் மூலக்கூறு-எடைகளையும் இதை யொத்த முறையிலேயே தீர்மானிக்கலாம். ஆக்ஸி ஜனின் வேதியியல் அணு-எடையின் 16இல் 1க்குச் சமமாக வுள்ள அளவே அணு-எடையின் அலகாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளது. எனவே, ஆக்ஸிஜனின் அணு-எடை சரியாக 16.0000 ஆகின்றது. இங்ங்னமே, மூலக்கூறு-எடையும் அதே மூல அளவில் அளந்து கண்ட மூலக்கூறுப் பொருண்மை யின் தரமான அளவாகும் (Standard measure).