பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அணுக்கரு பெளதிகம் ஏற்கெனவே நாம் மோல், (Mol or Mole) எனப்படும் அலகினைக் குறிப்பிட்டுள்ளோம். ஒரு மோல் என்பது, ஒரு பொருளின் மூலக்கூறு-எடை எந்த எண்ணுல் குறிக்கப்பெறு கின்றதோ அத்தனை கிராம் அப் பொருளின் எடை ஆகும். எனவே, ஹைட்ரஜன் வாயுவின் (H, ஒரு மோல் என்பது 2 கிராம்; ஆக்ஸிஜன் வாயுவின் (0) ஒரு மோல் என்புது 32 கிராம்; நீரின் (H,0) ஒரு மோல் என்பது 18 கிராம். எனவே, பல்வேறு பொருள்களின் ஒரு மோலின் பொருண்மைகள் முறையே அப்பொருள்களின் மூலக்கூறு-எடைகளுக்குச் சமமாக இருக்கும்; அஃதாவது, அவற்றின் தனிப்பட்ட மூலக்கூறுப் பொருண்மைகளுக்குச் சமமாக இருக்கும். ஆகவே, ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும், மிகச்சரியாக அதே எண்ணிக்கையுள்ள மூலக்கூறுகள் அடங்கி உள்ளன என்ருகின்றது. இதனை யொட்டியே ஒரு தனிமத் தின் அணு-எடை எவ்வளவோ அத்தனை கிராம் எடை யுள்ள அத்தனிமத்தைக் கிராம்-அணு (gramme-atom) என வழங்குகின்ருேம். எனவே, 1 கிராம்-அணு ஹைட்ரஜன் (H) என்பது 1 கிராம்; 1 கிராம்-அணு ஆக்ஸிஜன் (0) என்பது 16 கிராம். ஆகவே, எந்த ஒரு தனிமத்தின் 1 கிராம்-அணுவில்அடங்கியுள்ள அணுக்களின் எண்ணிக்கை.எப் பொழுதும் ஒருமோல் அளவு அப்பொருளில் அடங்கி இருக்கும் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும் என்பது தெளிவாகின்றது. இத்தகைய கருத்துக்களைப்பற்றிய அறிவு மிகவும் இன்றியமையாதது; எனெனில், மூலக்கூறுகளையோ அல்லது அணுக்களையோ நிறுத்து அவற்றின் எண்ணிக்கை களைக் கணக்கிட இவ்வறிவு துணையாக அமைகின்றது; இக் காரணத்தாலேயே ஒரு மோல் கொண்டுள்ள மூலக்கூறுகளின் சரியான எண்ணிக்கையை அறிந்து கொள்வதும் மிகமிக இன்றியமையாததாகும். ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல, இந்த எண்ணிக்கை முதலில் சரியாகவே-ஓரளவு அளவின் ஒழுங்கையொட்டி-லாஷ்மிட்" என்பாரால் 1855-இல் 3 outrashlāLG-LOSchmidt.