பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அணுக்கரு பெளதிகம் நியூஸிலாந்து' நாட்டில் நெல்சன்" என்ற நகரில் 1871-இல் தோன்றினர்; 1936-இல் இங்கிலாந்து' நாட்டில் கேம்பிரிஜ்' நகரில் மறைந்தார். கதிரியக்கம் என்ற நிகழ்ச்சி அறிவிக்கப் பெற்ற சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் பல்வேறு வகைப் பட்ட கதிர்கள் கதிரியக்கப் பொருள்களால் விடுவிக்கப்பெறு கின்றன என்பதைக் கண்டார்; சடப்பொருளில் அக்கதிர்கள் உட்கவரப்பெறும் பல்வேறு திறன்களிலிருந்து அவை வேறு படுத்தி அறியப்பெற்றன. அவை ஆல்பாக் கதிர்கள் என்றும் பீட்டாக் கதிர்கள் என்றும், காமாக்.கதிர்கள் என்றும் வழங்கப் பெறுகின்றன. ஆல்பாக் கதிர்களும் பீட்டாக் கதிர்களும் காந்தப்புலனுல் ஒதுக்கப்பெறுகின்றன; இதிலிருந்து அவை மின் ஏற்றம் பெற்றவை என்பது புலனுகின்றது. ஆல்பாக் கதிர்கள் நேர் மின் ஏற்றம் (Positive charge) பெற்றவை: பீட்டாக் கதிர்கள் எதிர் மின் ஏற்றம் (Negative charge) கொண்டவை. காமாக்கதிர்கள் மின் ஏற்றம் பெருதவை: ஆதலால் அவை காந்தப்புலனல் ஒதுக்கப்பெறுவதில்லை. கதிர்களின் பண்புகள்: ஆல்பாக் கதிர்களை இன்னும் திட்டமாக ஆராய்ந்ததில் அவை விரைவாக இயங்கிச் செல்லும் துகள்களாலானவை என்றும், ஒவ்வொரு துகளும் இரண்டு குவாண்டங்கள் அளவு நேர் மின்சாரத்தைச் சுமந்து சொல்லுகின்றன என்றும். அவற்றின் பொருண்மை ஹlலிய அணுவின் (Helium atom) பொருண்மைக்குச் சமமானதென்றும் (அணு-எடை4) முடிவாகத் தெரிந்தன. பீட் டாக் கதிரியக்கத்திலடங்கிய துகள்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒர் குவாண்டம் அளவு எதிர் 10 #gsr$avTÉ 5-New Zealand. II QJ5äv&çìr-Nelson. 12 இங்கிலாந்து.England. 13 Gäläijifilogg-Cambridge.