பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Vỉ இந்நூலே யான் வெளியிட இசைவு தந்த திருவேங்கட வன் பல்கலைக் கழகத்தினருக்கு-சிறப்பாக அப் பல்கலைக் கழகத்தினைச் சீரிய முறையில் இயக்கிவரும் அதன் துணை வேந்தர் டாக்டர் W. C. வாமன்ரால் அவர்கட்கு-என் மன முவந்த நன்றியைப் பணிவன்புடன் புலப்படுத்திக் கொள்ளு கின்றேன். பன்மொழிப் புலவர் உயர்திரு. தெ. பொ. மீளுட்சி கந்தரஞர் அவர்களை அறியாதவர்களே இரார். அவர்கள் தற் காலப் புதிய துறையாம் மொழியியல் துறையின் கொடுமுடி யைக் கண்டவர்கள். பல்லாண்டுகள் சென்னை அரசினரின் தமிழ்நூல் வெளியீட்டுக் கழகத்தின் (Bureau of Tamil Publications) தலைவராக இருந்து பல துறைகளில் பல அரிய தமிழ் நூல்கள் வெளிவரக் காரணமாக இருப்பவர்கள்; சென்னைப் பல்கலைக் கழகம் ஈன்ற அருமை மகளாம் மதுரைப் பல்கலைக் கழகத்தை அதன் முதல் துணை வேந்தராக நின்று 'பால் நினைந்துரட்டும் தாயினும் சாலப் பரிந்து வளர்க்கும் பெரியார். அவர்களின் திருவடிகளில் இந்நூலினைப் படைத் துப் பெருமைகொள்கின்றேன். அவர்களது ஆசியால் இந்நூல் தமிழ் மக்களிடையே பெருமிதத்துடன் உலவும் என்பது என் திடமான தம்பிக்கை. என்னிடம் இயல்பான பல குறைகளிலிருந்தும் என்னை யும் ஒரு கருவியாகக்கொண்டு என்னுள்ளே நின்று என்னை இயக்கி இந்நூலை இயற்றுவித்துத் தமிழன்னையின் புதுவாழ் வில் பணியாற்ற சிறியேன் மேற்கொண்ட முயற்சியை நிறை வேற்றி வைத்த எல்லாம் வல்ல நீலமேனி நெடியோனை மனம், மொழி, மெய்களால் நினைத்து, வாழ்த்தி, வணங்கு கின்றேன். திருப்பதி ஜூன் 30, 1986 ந. சுப்பு ரெட்டியார்