பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அணுக்கரு பெளதிகம் அடிப்படையில் ரதர்ஃபோர்டு உண்மையாகவே பொருண் மையால் நிரப்பப்பெற்றுள்ள வெளியின் பருமனளவினைக் கணக்கிட முடிந்தது; இந்த வெளியைத் தவிர எஞ்சி யுள்ள வெளி முழுவதும்-நடைமுறையில்-வெட்ட வெளி யாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தார். ரதர்ஃபோர்டுடன் சேர்ந்து பணியாற்றிய கைகர்' என் பாரும் மார்ஸ்டென்" என்பாரும் மேலும் நேர் மின்ஏற்றம் பெற்ற ஆல்பாத் துகள்களின் ஒதுக்கங்கள் மின் விசை களால் உண்டாக்கப்பெறுகின்றன என்றும், அவ்வாறு உண் டாவதற்குக் காரணம் அணுவின் நடுப்பகுதியிலுள்ள நேர் மின்ஏற்றமே என்றும் நிலைநிறுத்துவதில் வெற்றி கண்டனர். எனவே, நாம் நன்ருக அறிந்துள்ள கூலோம்பின் விதிப்படி அணுவின் இந்த நடுப்பகுதியும் ஆல்பாத் துகள்களும் ஒன்றையொன்று வெறுத்துத் தள்ளின என்று அறிகின் ருேம். ரதர்ஃபோர்டு அமைத்த அணுவின் மாதிரி உருவம்: இந்த முடிவுகளின் அடிப்படையில்தான் ரதர்ஃபோர்டு அடியிற் கண்ட அணுவின் மாதிரி உருவத்தை" அமைத்தார்: அணுவில் நேர் மின்ஏற்றம் பெற்ற உட்கரு அடங்கியுள்ளது: இவ்வுட்கருவில் அணுவின் பொருண்மை முழுவதும் அடங்கி யிருக்கின்றது. ஆனால், இவ்வுட்கரு அணுவின் மொத்த அளவில் மிகச்சிறிய பகுதியையே அடைத்துக்கொண்டுள்ளது. உட்கருவின் நேர் மின்ஏற்றம் எலக்ட்ரான்களின் ஊட்டத் திற்குச் சரி சமமாகச் செய்யப்பெற்றுள்ளது; உட்கருவிலி ருந்து உண்டாக்கக்கூடிய கவர்ச்சியால் இந்த எலக்ட்ரான்கள் சிறைப்படுத்தப்பெற்று உட்கருவினைச் சுற்றி மிகத் தொலை விடங்களில் சுழல்கின்றன. இந்த எலக்ட்ரான்கள் அணு அமைப்பில் உட்கருவின் வெளிப்பகுதியாக உள்ளன. கோள் 17 so off-Geiger. 18 upstfiaból cir-Marsden. 19 gigololor Loirós, e.gjasth-Atom model