பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 47 நிலையில் சுழன்று கொண்டுள்ள எலக்ட்ரான்களின் எண் னிக்கை உட்கருவின் மின்னூட்டத்தையொட்டி அறுதியிடப் பெறுகின்றது. ஒவ்வோர் எலக்ட்ரானும் ஓர் அடிப்படை அளவு எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருப்பதால், எலக்ட் ரான்களின் எண்ணிக்கை உட்கருவிலடங்கியுள்ள நேர் மின் னுாட்ட அடிப்படை அளவுகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கவேண்டும். காரணம் என்ன வென்ருல், அப்பொழுது தான் அணு முழுவதும் மின்சார சமனிலையில் இருக்கும். எனவே, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அணுவின் எல்லாப் புறப்பண்புகளையும் அறுதியிடுகின்றது என்பது தெளிவா கின்றது; சிறப்பாக, அது வேறு அணுக்களிடம் செலுத்தக் கூடிய விசைகளையும்.அறுதியிடுகின்றது. அஃதாவது, அவற்றின் வேதியியற் பண்புகளும் உட்கருவின் மின்னூட்டத்தால் இறுதியாக அறுதியிடப்பெறுகின்றன. அணுவின் அளவுகள்: அணுவினுள் அடங்கியுள்ள அளவுகளைப்பற்றி ஒரளவு அறிந்து கொள்வதற்காக, உட்கருவின் புற அமைப்புடன் கூடிய அணுவொன்றினைக் கற்பனையில் காண்போம்; இந்த அணுக்கோளத்தின் குறுக்களவு கிட்டத்தட்ட 10 செ. மீ. ஆக இருக்கட்டும். இத்தகைய அணுவின் மாதிரி உருவத்தில் எலக்ட்ரான்களையும் உட்கருவினையும் அவற்றின் சரியான விகித முறைகளில் அமைத்துக்காட்டுவதென்பது மிகவும் கடினமானது; அந்த அளவுகள் மிகச் சிறியவையாதலின், நம் மால் அவ்வாறு அமைத்துக் காட்ட இயலாது. இத்தகைய அணுவின் மாதிரி உருவத்தில் உட்கரு கிட்டத்தட்ட ந் மில்லி மீட்டர் குறுக்களவுள்ள மிக நுண்ணிய துகள்போல் காணப்பெறும்; எலக்ட்ரான்களும் ஏறக்குறைய அதே அள வில்தான் இருக்கும். ஹைட்ரஜன் அணுவின் அமைப்பு: அணுக்கள் எல்லாவற்றிலும் மிகவும் இலேசானது.ஹைட் ரஜன் அணு. அதிலுள்ள உட்கரு ஒர் அடிப்படைக் குவாண்