பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அணுக்கரு பெளதிகம் டம் அளவு மின்சாரத்தைக் கொண்டுள்ளது. ஆகவே அத னேச்சுற்றி ஓர் ஒற்றை எலக்ட்ரான் சுழன்று வருகின்றது. இதில் உட்கரு ஒர் அலகு மின்னுட்டத்தைப் பெற்றுள்ளது: அஃதாவது அதன் மின்னூட்ட எண் 1. இந்த அணுவினை நாம் கண்ணுல் காணும் மாதிரி உருவமாக அமைக்க வேண்டு மாயின், கதிரவனைச் சுற்றி ஒரு கோள் இயங்கி வருவதுபோல் உட்கருவினைச் சுற்றி ஓர் எலக்ட்ரான் இயங்கி வருகின்றது என்ப தாகக் கொள்ளல் வேண்டும்; இல்லாவிட் டால் எலக்ட்ரான் உட்கருவினுள் விழுந்து விடும். ஆகவே, நாம் எலக்ட்ரான் செல்லும் பாதையை வரைதல் வேண்டும். தற்சமயம் - ஆ; அஃது ஒரு வட்டவடிவமான அயனப் பாதை ఇతణ్ణత இயங்கி வருவதாகக்கொள்ளுவோம். (படம்-4) ஹீலிய அணுவின் அமைப்பு: எல்லா அணுக்களிலும் ஹைட்ரஜன் அணுதான் மிகவும் எளிதானது. இதற்கு அடுத்தது 2 மின்னுரட்ட எண்ணினைக் கொண்ட ஹீலிய அணுவாகும். அதில் இரண்டு அடிப்படைக் குவாண்டங்கள் அளவு மின்சாரம் அதன் உட்கருவிலும், இரண்டு கோள்நிலை எலக்ட்ரான்கள் உட்கருவின் புறஅமைப் பிலும் அடங்கியுள்ளன. இவ்வாறே, தற்சமயம் நாம் அறிந் துள்ள மிகப் பளுவானதும் 9.6 மின்னுரட்ட எண்ணைக் கொண்டதுமான குயூரியம் அணு வரையிலும் அமைந்துள் ளது. இப் பொருள்பற்றிய தேவையான எல்லாத் தகவல் களும் இந்த நூலின் இறுதியில், அட்டவணை II இல், தரப்பெற்றுள்ளன.

  • இன்று 104 மின்னூட்ட எண்வரை அணுக்கள் கண் டறியப்பெற்றுள்ளன.