பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 49 ரதர்ஃபோஸ்டு அணுவின் மாதிரி உருவக் கட்புல விளக் கத்தை அதன் தோற்ற மதிப்பிலிருந்து எந்த அளவுக்கு ஏற் றுக் கொள்ளலாம் என்ற பிரச்சினை மீண்டும் எழுகின்றது. என்ருவது ஒரு நாள் மிக உயர்ந்த நுண் பெருக்கியின் (Super. microscope) துணைக் கொண்டு உட்கருவினைச் சுற்றி அயனப் பாதைகளில் (Orbits) எலக்ட்ரான்கள் சுற்றி வருவதை நம் கண்களினுல் பார்க்கக் கூடும் என்று எதிர் பார்க்கலாமா? எலக்ட்ரான்கள் இவ்வாறு கொள்ளும் இயக்கங்களை நொடிப் படங்களாக (Snapshots) எடுக்கவேண்டும். நாம் இன்று பெற்றுள்ள அறிவினைப் பொறுத்தவரையில் ஒரு ஹைட் ரஜன் அணுவின் நொடிப்படம் நாம் விளக்கத்திற்காக எடுத்துக் காட்டிய படத்தைப் போலவே இருக்கும் என் பதைப் பற்றி நாம் முற்றிலும் ஐயப்படுவதற்கில்லை: அஃதாவது அப்படம் ஒரு மில்லி மீட்டரின் நூறு இலட்சத் தில் சில பகுதி அளவு தூரத்தில் இரண்டு மின்னூட்டப்புள்ளி களாக இருக்கும். இதுதான் ரதர்ஃபோர்டின் அணுவின் மாதிரி உருவத்தைப்பற்றிய நடைமுறை உட்கருத்தாகும். நம்முடைய ஒளிப்படங்கள் கட்புலனுகும் ஒளிக்கதிர்களைக் கொண்டு எடுக்கப் பெருமல் அவை எலக்ட்ரான் கதிர்களைக் கொண்டே எடுக்கப்பெறுவதால் இப்படங்கள் திட்டமான வண்ணங்களில் அமையா என்பது வெளிப்படை. ஆயினும், அந்த ஹைட்ரஜன் அணுவின் நொடிப்படம் உட்கரு ஒற்றை எலக்ட்ரான் ஆகிய இரண்டு துகள்களையும் திச்சயமாகக் காட்டும். ஒளிப்படம் எடுப்பதில் சங்கடம்: ஆனல், நம்முடைய எலக்ட்ரான் நுண் பெருக்கியை ஏதாவது ஒருவித அசையும் ஒளிப்படக் agourag (Moving picture camera) செய்யக் கூடுமானல், அணுக்கருவினைச்சுற்றி அயனப் பாதையில் இயங்கும் எலக்ட்ரானைத் தொடர்ந்து செல்லவும் அதன் அயனப் பாதையை அறுதியிடவும் சாத்திய மாகுமா? இங்கு நாம் அணுவின் மாதிரி உருவத்தைக் அ-4