பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அணுக்கரு பெளதிகம் கொண்டு கட்புலனுகும் எல்லைகளை அடைந்து விட்டோம் என்ற அடிப்படைச் சங்கடம் ஒன்றனைக்காண்கின்ருேம். ஏனெ னில், நாம் நம்முடைய ஃபிலிமைக்கொண்டு முதற் படத்தை எடுத்ததும், நாம் அதே அணுவின் இரண்டாவது படத்தை எடுக்கும் நிலையில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன? அதை நாம் மீண்டும் நிலைகுலையாத நிலையில் இருப்பதைக் காண்பதில்லை. முதற்படம் எடுப்பதற்கு நமக்குத் துணையாக இருந்த அதே எலக்ட்ரான்களாலேயே அணு உருக்குலைந்து விட்டது. முதல் ஒளிப்படத்தை எடுப்பதற்குப் பயன்பட்ட எலக்ட்ரான்களின் முதல் தாக்குதல் அவ்வணுவின் எலக்ட் ரானை அதன் உள் அணுப் பிணைப்பிலிருந்து (intra-atomic bond) கிழித்தெறிந்து விட்டது; ஆகவே, இரண்டாவது படத்தில் காணப்பெறும் அணு எக்காரணங்களாலும் மாருத அதே அணுவாக இருத்தல் முடியாது. எனினும், அணுக் கருவிற்குப் புறத்தே மிகத் தொலைவில் நாம் எலக்ட்ரானைக் காண்போம். எனவே, அணுவினுள் எலக்ட்ரானின் அயனப் பாதை யைக் காண்பது இயலாததொன்று என்பது தெளிவாகின் றது.ஆனல் இயற்கை விதிகளின்படி சிறந்த முறையிலமைந்த நுண்பெருக்கியில் இவ்வாறு இயலாமல் இருப்பது அதன் எந்தக் குறைபாட்டினலும் அன்று ஆளுல் இயற்கை விதிகளின் விளைவாகவே அங்ங்னம் முடியாது போகின்றது. இந்த இயற்கை விதிகளைக் கொண்டு எலக்ட்ரான்களைத் தம்அயனப் பாதையில் மிக அதிகமான மின் அழுத்த விசையில் வேகமாக செலுத்தப்பெறும் எலக்ட்ரான் நுண்பெருக்கியைப்போன்ற தீவிரமான முறைகள்தாம் மிகத் தெளிவான சிறந்த அணு வின் படத்தை அடையும் முறைகளாகும். இஃது இயற்கை விதிகளை யொத்தும் அமைகின்றது. இந்தக் கட்டத்தில், நாம் கட்புலகுைம் எல்லைகளை அடைந்து விட்டதாகவும், அணுக்கருவினைச் சுற்றி இயங்கும் எலக்ட்ரான்களைப்பற்றிய கருத்தினை, முக்கோண வடிவத் தில் அமைந்த நீரின் மூலக் கூறு இரண்டு ஹைட்ரஜன் அணுக் களையும் ஒர் ஆக்ஸிஜன் அணுவினையும் கொண்டது என்ற