பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அணுக்கரு பெளதிகம் முயலுவோம். முதலில், படம்-3இல் ஆல்பாத் துகள்களின் சுவடுகளை மீண்டும் ஒரு முறை உற்று நோக்குவோம்; இதில் அவற்றின் துகள் தன்மை மிகத் தெளிவாகப் புலனுகின்றது இந்தச் சுவடுகளை ஆராய்ந்த பிறகு, மிகச் சிறிய துகள்கள் உண்மையில் வெளிப் பரப்பின் ஊடே பரந்து சென்று இங்கு ஏதோ ஓரிடத்தில் ஒதுக்கம் பெறுகின்றன என்பதில் எவரும் சிறிதேனும் ஐயங் கொள்ள இயலாது. இரண்டாவதாக, சோதனைகள்பற்றிய சான்றும் உள் ளது; சோதனைகள் அதே அளவு உறுதிப்பாட்டுடன், ஆல் பாக் கதிர்கள் என்பவை துகள்கள் அல்ல வென்றும், ஆளுல் அவை கதிர் வீச்சு மூலத்திலிருந்து பரந்து வரும் அலைகள் என்றும் உணர்த்துகின்றன. இதனை ஆல்பாக் கதிர்களைக் கொண்டு செய்து காட்டல் (Demonstrate) முடியாது; ஆனல் பீட்டாக் கதிர்களைக் கொண்டு செய்துக்காட்ட முடியும்; இக் கதிர்களின் துகள் சன்மை ஆல்பாக் கதிர்களினுடைய வற்றை விட உள்ளத்திற் கண்டுணரதக்கவாறு எண்ணற்ற சோதனைகளால் மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது. சடப்பொரு ளின் மெல்லிய அடுக்குகளினூடே பீட்டாக் கதிர்களை ஊடுரு விச் செல்லச் செய்தால், அதே நிலையில் எக்ஸ் கதிர்களிடம் நாம் காணுவது போன்ற அதே வித எதிர்த்தழித்தல் (Interference) நிகழ்ச்சியையே அவை காட்டுகின்றன: எக்ஸ் கதிர் கள் அலேக் கதிர்வீச்சாக உள்ளன என்பதை நாம் பழக்கத் தில் உணர்ந்துள்ளோம். சடப்பொருளின் அடுக்கினைக் கதிர் கள் துளைத்துச் செல்வதால் நடுக் கதிர் ஒன்றும் அதனைச்சுற்றி ஒதுக்கப்பெற்ற அலைகள் ஒன்றன்மீது ஒன்முகப் பதிந்ததால் உண்டான வளையங்களால் சூழப்பெற்றுள்ளது என்பதுவே எதிர்த்தழிக்தல் என்ற நிகழ்ச்சியாகும். இவற்றை ஒப்பிடு வதற்கு இரண்டு ஒளிப்படங்கள் காட்டப்பெறுகின்றன: ஒன்று (படம்-5) எக்ஸ்-கதிர்களால் எடுக்கப்பெற்றது; மற் ருென்று (படம்-6) பீட்டாக் கதிர்களால் எடுக்கப்பெற்றது. பின்னதாகக் குறிப்பிட்ட படம் இதுகாறும் எடுக்கப்பெற்ற இவ்வகை ஒளிப் படங்களில் முதன் முதலாக எடுக்கப்பெற்ற தொன்ருகும். ஆணுல், அவற்றின் தெளிவுத் தன்மையில்