பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 59 நிலையான வினியோகத்தைச் சரிபார்க்கவும் அடிப்படையாக அமைகின்றன; ஆகவே, கதிர்வீச்சே இல்லாத அணுவின் நிலையான நிலைகளின் இருப்பு இன்னதென்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆகவே, அணுவின் மாதிரி உரு வத்தைபற்றிய சங்கடங்களில் ஒன்று நீக்கப்பெறுகின்றது. அணுவிலுள்ள நிலையான அலைகள்: ஒர் அணுவில் இருக்கக்கூடிய தனிப்பட்ட நிலையான அலை கள் ஓர் இசைக் கருவியின் நரம்புகளில் உண்டாகும் தனிப் பட்ட பண்புள்ள அதிர்வுகளைப்போல் ஒரு தொடர்பான வரிசைகளில் அமைவதில்லை. ஒரு நரம்பு அதன் அடிப்படைத் தொனியில் அதிர்வடைதல் கூடும்; அப்பொழுது அதற்கு அதிர்வில்-இடங்கள் (Nodes) இல்லை. ஆயினும் மற்ருெரு வகையில் அது மிகுசுரங்களிலும் (Overtones) அதிர்வடைதல் கூடும்; அப்பொழுது அஃது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட அதிர்வில்-இடங்களைப் பெற்றிருக்கும். இவ்வாறே, ஒர் அணு தன் கீழ்நிலையில் (Ground state) அதிர்வடைதல் கூடும்; அப்பொழுது அதற்கு அதிர்வில்-இடங்கள் இல்லை. அஃதாவது, சடப்பொருளின் செறிவு மறையக்கூடிய நிலை களே அதற்கு இல்லை. ஆனல், அது மிகுசுரத்தில்கூட அதிர் வடைதல்கூடும்;--அது கிளர்ந்தெழும் அதிர்வடைதல் (* Excitcd' vibration) steur 6rp is. Gugulh-sie OLITOpg டில்வேறு செறிமானமற்ற நிலைகள் உள்ளன. இந்தப் பல் வேறு நிலையான அதிர்வுகள் ஓர் அணு மேற்கொள்ளக்கூடிய பல்வேறு அமைதியான நிலைகளை ஒத்துள்ளன. விளக்கம்: இனி, நாம் மேற்குறிப்பிட்ட வரையறைகளை மிக எளிய அணுவாகிய ஹைட்ரஜன் அணுவினை எடுத்துக்காட்டாகக் கொண்டு சில படங்களின் துணையினல் விளக்க முற்படு வோம். ஹைட்ரஜன் அணுவின் கீழ்நிலை (ls என்ற குறியீட் டினல் காட்டப்பெற்றிருப்பது) 1913-இல் போர் என்பாரால்