பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அணுக்கரு பெளதிகம் அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானின் வட்ட அயனப் பாதையாக (படம்-4) விவரிக்கப்பெற்றது. துகள் கூறினேப் பொறுத்தமட்டிலும் இஃது ஒரு தெளிவான படமே. இந்தக் கருத்துப்படி , அணுக்கருவினையொட்டி எலக்ட்ரான் ஒரு தற் சுழற்சித் திருப்புதிறனைப் (Spin moment) பெற்றுள்ளது. இன்று நாம் உண்மையில் அத்தகையது ஒன்று இல்லை என அறிகின்ருேம். ஆகவே, இன்று நாம்-துகள் கூறு என்ப தன் அடிப்படையிலேயே-எலக்ட்ரான் அணுக்கருவினை யொட்டி ஒரு நேர்க்கோட்டில் முன்னும் பின்னுமாக இயங் கிக்கொண்டுள்ளது என்றுகூடச் சொல்லுகின்ருேம். ஆகவே, படம்-7 (a)-இல் காட்டியுள்ளபடி நாம் அணுக்களைக் கற்பனை செய்து பார்க்கின்ருேம். ஆளுல், மற்ருெரு வகையில், ஹைட்ரஜன் அணுவி லுள்ள மின்னியற் பொருளின் நிலையை அலைக்கூறு என்று கூடக் கருதலாம் (படம்-7 (b)). நாம் அணுவின் கீழ்நிலையில் (Ground state) ஆயிரக்கணக்கான நொடிப்படங்களை எடுத்து அவற்றை ஒன்றன்மேல் ஒன்ருகப் பொருந்தும்படி செய்தால், நாம் படம்-7 (b)-இல் காட்டியுள்ளபடி ஒரு செறிவு வினி யோகத்தை அல்லது ஏற்பு வினியோகத்தை அடைவோம். அது ஷ்ரோடிங்கரின் அலைநுட்பவியலின்மூலம் கணக்கிடப் பெறுகின்றது. ஆளுல், வெளியிலிருக்கும் ஓர் எலக்ட்ரானின் தாக்கு தலின் விளைவாக ஒர் அணு மிகு சுரங்களுக்கும் கிளர்ந்த நிலைக்கும் செல்லுதல்கூடும். இத்தகைய கிளர்ந்த நிலையில் அணு, கதிர்வீச்சினேப் பெறுகின்றது: அஃதாவது ஒளியின் ஃபோட்டானை (ஒளியாற்றலின் குவாண்டம்) வெளிவிடுகின் றது. இது நிகழ்வதற்குக் காரணம் யாதெனில், அணு. கிளர்ந்த நிலையிலிருந்து கீழ் நிலையை அடைகின்றது; அல்லது குறைந்த ஆற்றலைக் கொண்ட மற்ருெரு கிளர்ந்த நிலையை அடைகின்றது. படங்கள் 7 (a)-யும் 7 (b)-யும் அத்தகைய நிலைகளைக் காட்டுகின்றன; அவை 2p, 2s என்ற குறியீடு களால் காட்டப்பெற்றுள்ளன. சடப் பொருளின் அலைக்