பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 6 : கூறில் கீழ் நிலையின் மிக அண்மையிலுள்ள கிளர்ந்த நிலை அதிர்வில்-இ- தளத்துடன் (Nodal plane) கூடிய அமைதி யான அலேயால் காட்டப்பெற்றுள்ளது; இந்தத் தளம் நமது ஒவிய தளத்திற்குச் செங்குத்தாக அமைந்துள்ளது. ஆனால், இந்தச் செறிவு வினியோகம், நம்முடைய கட்புல உணர்வுக் குத் துனேயாக இருக்கக்கூடிய ஒரு மாதிரிக் கோலந்தான்; இஃது ஆயிரக்கணக்கான நொடிப்படங்களின் துணையால்தான் புலனிடான உட்கருத்தினை எய்துகின்றது. இதே அமைதி நிலைகளை நாம் துகள் கூறின் அடிப்படையில் விளக்க விரும்பினல், போரின் அசல் கொள்கையிலுள்ளதுபோலவே நாம் வட்ட வடிவ அயனப்பாதையை அடைகின்ருேம்; ஆளுல், இந்த அயனப்பாதை வெளிப்பரப்பில் பல்வேறு நிலை களை மேற்கொள்ளுதல்கூடும்; ஒன்றன்மீது ஒன்முக அமைக்கப் பெறும் இந்த நிலைகளும் ஒர் ஏற்பு வினியோகத்தில் அல்லது ஒரு செறிவு வினியோகத்தில் முடிவடைகின்றன; இதில் அலைக் கூறில் உள்ள அதே அதிர்வில்-இடதளம் காணப்பெறு கின்றது. அதிக ஆற்றலுள்ள கிளர்ந்த நிலைகளில் (2s), நடுவில் உயர்ந்த அளவு செறிவு உண்டாகின்றது. இது வெளிப்புறத் தில் ஒரளவு செறிவற்ற வளையத்தையும் கொண்டதாகவுள் ளது. இம்மாதிரியான நிலைகளில், வளையத்தின் அருகில் எலக்ட்ரான் திடீரென்று தாக்கப்பெறுதல் கூடும். இவ்விடத்தில் மேலும் பல விவரங்களை நாம் ஆராயப் போவதில்லை. ஒரளவு அணுவின் அமைப்பை விளக்குவதற் குப் பெளதிக இயலில் மேற்கொள்ளப்பெறும் பல்வேறு பொதுமைக் கருத்துக்களைப்பற்றிச் சிறிதளவு விளக்கவேண்டு மென்பதுதான் எனது ஒரே நோக்கம். அணு அமைப்பின் ஒவ்வொரு சிறப்பியல்பையும் ஒரேகாலத்தில் அடக்கிக் கொண்டு கட்புலணுகக்கூடிய விளக்கத்தை ஏன் தர முடிய வில்லை என்பதற்குரிய காரணம் ஏற்கெனவே ஆராயப் பெற் றுள்ளது. х