பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 6 அணுக்கரு பெளதிகம் எலக்ட்ரான்கள் மட்டிலுமே இருப்பதால், இந்தக்கூடு நிரம்பு வதற்கு இன்னும் ஒர் எலக்ட்ரான் தேவைப்படுகின்றது. இந்த மெய்ம்மை ஃபுளோரினின் வேதியியற் பண்புகளுக்கு ஒரு குறிப்பாக அமைகின்றது: ஃபுளோரின் அணு எட்டா வது எலக்ட்ரானே ஏற்று இந்தக் கூட்டை நிரப்புவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளது. எனவே, அஃது எதிர் மின்சார இயல்பைப் பெறவும், கரைசல்களில் எதிர் மின்னேற்றம் அடையவும் தயராக இருக்கின்றது. ஓர் எல்லையின் தொடக்கத்திலுள்ள தனிமங்கள் (ஹைட்ரஜனும் கார உலோகங்களும்) ஓர் எலக்ட்ரானை வெளிவிட்டு அவ் வெல்லைகளின் ஈற்றயலுக்குரிய தனிமங்களுள் ஒன்றனுடன் உடனே சேர்கின்றன; இவை உப்பீனிகள் (Halogens); இவை உடனே ஒர் எலக்ட்ரானே ஏற்றுக்கொள்கின்றன. ஹைட் ரஜன் ஃபுளோரைடு (HF), சோடியம் குளோரைடு (Nacl) (சோற்றுப்பு) ஆகியவை இவ்வாறு சேர்ந்த கூட்டுப் பொரு ளுக்கு எடுத்துக்காட்டுக்களாகும். - - இரண்டுக்கு மேற்பட்ட கூடுகள்: சோடியத்தில் தொடங்கி ஆர்கானில் முடிவுபெறும் மூன்ருவது எல்லேக்குள்ளும் எட்டுத் தனிமங்கள் அடங்கி யுள்ளன. அதன்பிறகு ஆவர்த்த அமைப்பு சிறிதளவு சிக்க லுள்ளதாகின்றது. நான்காவது எல்லையும் (பொட்டாசியத் திலிருந்து கிரிப்டான் வரை) ஐந்தாவது எல்லையும் (ருபீடியத் திலிருந்து ஜெனன் வரை) ஒவ்வொன்றும் பதினெட்டுத் தனிமங்களுடன் கூடியனவாக அமைகின்றன: ஆருவது எல்லைக்குள் (செசியத்திலிருந்து மந்த வாயுவாகிய ரேடான் வரை) முப்பத்திரண்டு தனிமங்கள் அடங்கியுள்ளன. இறுதி யாகவுள்ள எல்லே முற்றுப்பெருதது என்பது வெளிப்படை, இன்றுவரை அதுகுயூரியத்துடன் (98) முடிவுபெற்றுள்ளது." 31. இன்று தொபீலியம் (103) வரையிலும் மேலும் ஏழு தனிங்கள் கண்டறியப் பெற்றுள்ளன. . . . .