பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 69 லாகக் கண்ட சில ஆண்டுகட்குப் பிறகு ரதர் ஃபோர்டும்' சாடியும் ஆல்பா, பீட்டாக் கதிர்களை வெளிவிடல் வேதி யியல் தனிமங்களின் மாற்றத்துடன் தொடர்பு கொண்டுள் ளது என்பதைக் கண்டறிந்தனர்; இக் கண்டுபிடிப்பு அணுக் கொள்கை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதிர்வீசல்களில் ஏதாவதொன்றனை வெளிவிட்ட பிறகு அந்த அணு அதே தனிமத்தின் அணுவாக இருத்தல் முடியாது. கதிரியக்கம் அணுக்கொள்கைக்கு முக்கியம்: இக் கண்டுபிடிப்பு அணுக்கொள்கைக்கு மிகமிக முக்கிய மானது. அணுக்களைப்பற்றிய பழைய கருத்தினை இனி ஒதுக் கித் தள்ளிவிட வேண்டியதுதான்; வேதியியலின் அணுக்கள் இறுதியான,பிரிக்கமுடியாத சடப்பொருளின் துகள்களாலான வையாக இருத்தல் முடியாது. இன்றும் நிச்சயமாக ஒரு தனி மத்தைப் பிறிதொரு தனிமமாக வேதியியல்முறையில் மாற்று வது சாத்தியமன்று. எனினும், இவ்விளைவினை உண்டாக்கக் கூடிய ஓர் இயற்கைச் செயல் உள்ளது என்பது உறுதியாகத் தெரிந்தது. கடந்த கால இரசவாதிகளின் அவாவிற்கும் நம்பிக்கைக்கும் இம்முறையில் புத்துயிர் அளிக்கப்பெற்றது. ஏனெனில், சிலவற்றில் இயற்கையே தனிமங்களின் மாற் றத்தை விளைவிக்கக் கூடுமாயின், தகுந்த கருவிகள் கண்டறி யப்பெற்ற பிறகு செயற்கை முறையிலும் இச் செயல் மேற் கொள்ளுவது சாத்தியப்படக் கூடியதுதான். கொள்கையள வில் பாதரசத்தைப் பொன்னக மாற்றுவதும் சாத்தியப்படக் கூடியதே! கதிர்வீசலால் தனிமங்களில் மாற்றம்: முதலாவதாக ஆல்பாத்துகள்களும் பீட்டாத்துகள்களும் மின்னூட்டங்களைச் சுமந்து செல்லுகின்றன என்றும், இரண் I grgri Gumri (9-Rutherford. 2 μ-Soddy