பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 71 மாறுவதில்லை. ஆனால், அதன் நேர்மின்னூட்டத்தில் 1 அதிகப் படுகின்றது; இதற்குக் காரணம், எதிர் மின்சாரத்தில் ஒர் அடிப் படைக் குவாண்டம் அளவு இழப்பதேயாகும். எனவே, ஓர் ஆல்பாத் துகளும் ஒரு பீட்டாத் துகளும் சேர்ந்து வெளிவிடப் பெறுதலால் அணு-எண்ணில் மாற்றம் நிகழ்கின்றது. தனி மங்களின் வேதியியற் பண்புகள் அணு. எண் எனப்படும் உட் கருவின் மின்ஏற்ற எண்ணைக்கொண்டு தீர்மானிக்கப் பெறுவ தால், ஆல்பாக் கதிர்வீசலும் பீட்டாக் கதிர்வீசலும் தனிமங் களின் மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்பது தெளி வாகின்றது. எடுத்துக்காட்டு, ரேடியம் : ரேடியத்தை எடுத்துக்காட்டாகக்கொண்டு இந்த மெய்ம்மைகளை (Facts) இன்னும் சற்று விளக்கமாக ஆராய் வோம். ரேடியத்தின் பொருண்மை.எண் 226; அதன் அணு. எண் 88; ஆகவே, அதன் குறியீடு geRa". ரேடியஅணு உட்கரு விற்குப் புறத்தே 88 எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது; 86. எலக்ட்ரான்கள்(2-4-8-18-32-18-8)முற்றுப்பெற்ற கூடுகளை உண்டாக்குவதால், எல்லாவற்றிற்கும் வெளிப்புற மாகவுள்ள முற்றுப்பெருத கூட்டில் சுழன்றுகொண்டிருக் கும் இரண்டு எலாக்ட்ரான்களைக்கொண்டே ரேடியத்தின் வேதியியற் பண்புகள் அறுதியிடப்பெறுகின்றன.ஆகவே,ரேடி யத்தின் வேதியியற்பண்புகள்காரமண் உலோகங்களில்(Alka1ine earth metals) ஒன்றன் வேதியியற் பண்புகளைப்போன் றுள்ளன; அஃதாவது, பேரியம் அல்லது ஸ்ட்ரான்ஷியத்தின் வேதியியற் பண்புகளே ஒத்துள்ளன. ரேடியத்தின் அணுக் கரு ஆல்பாக் கதிர்களை வெளிவிட்டுக்கொண்டிருக்கின் றது; இந்தக் கதிர்வீசலின் விளைவாக அதன் பொருண்மை 222 ஆகக் குறைக்கப்பெறுகின்றது; அதன் உட்கருவின் மின் ஏற்றமும், அஃதாவது அணு-எண்ணும், 86 ஆகக் குறைகின் றது. ரேடியத்தைப்போலவே கதிரியக்கமுள்ள ஒரு புதிய தனிமம் உண்டாகின்றது. அதுதான் மந்தவாயுவாகிய