பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அணுக்கரு பெளதிகம் ரேடான் என்பது; அதன் குறியீடு seRn". உட்கருவிலுள்ள மின் ஏற்ற எண்ணின் காரணமாக ரேடான் அணு 86 எலக்ட் ரான்களை மட்டுமே கொண்டுள்ளன; இவை முற்றுப்பெற்ற கூடுகளில் அமைக்கப்பெற்றுள்ளன. ஆகவே, இந்த அணு Geu84 Gerugpig) (Chemically inactive) "-airargi; -96% தாவது, இந்தத் தனிமம் ஒரு மந்த வாயு. ரேடிய அணுவி லிருந்து ஒர் ஆல்பாத் துகள் வெளிவிடப்பெறும் செயலும் ஒரு ரேடான் அணு உண்டாதலும் அடியிற்கண்ட வாய்பாட் டால் குறிப்பிடப்பெறுகின்றது : sa Ra”—> ssRn” + 2He” அம்புக்குறிக்கு இடப்புறமுள்ள குறியீடு கதிர்வீசும் அணு வினைக் குறிப்பது; அம்புக்குறிக்கு வலப்புறமுள்ள குறியீடுகள் ஆல்பாத் துகள் வெளியிடப்பெற்றதன் விளைவாக நேரிட்ட மாற்றத்தைக் காட்டுபவை. இத்தகைய வாய்பாட்டில் அம் புக்குறியின் இரு பக்கங்களிலுமுள்ள குறியீடுகளின் வலப்புற மேல் எண்களின் கூட்டுத் தொகை சமமாக இருத்தல் வேண் டும்; இந்த எடுத்துக்காட்டில், 226= 222-4. இது பொருண்மை அழியா விதியிலிருந்து எழுந்ததாகும். இதே விதி குறியீடுகளின் இடப்புறக் கீழ் எண்களுக்கும் பொருந்து கின்றது; இதில் 88 = 86-2. இது மின்னூட்டம் அழியா விதியிலிருந்து எழுந்ததாகும் பீட்டாக் கதிர்வீசல் நிகழும் செயல்களிலும் இவை போன்ற வாய்பாடுகளே கையாளப் பெறுகின்றன. ஒருபடித்தான பொருளின் கதிரியக்கப் பண்புகள் : ஒருபடித்தான கதிரியக்கப்பொருளின் வெளிவிடும் எல்லா-கிட்டத்தட்ட எல்லா-ஆல்பாத் துகள்களும் சரி யாக ஒரே வீச்சினையே (Range) பெற்றுள்ளன. இது படம்-3 (a) யில் காட்டப்பெற்றுள்ள முகில் அறை ஒளிப்படத்தால் தெளிவாகின்றது. அஃது இரண்டு கதிரியக்கமுள்ள பொருள் களின் படிப்படியான சிதைந்தழிதலைக் காட்டுகின்றது; ஆத லால்தான் நாம் ஆல்பாக் கதிர்களின் இரண்டு தொகுதிகளைக்