பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு எரியைகள்

87


வரை யுரேனிய உலோகம் இருக்கிறது. இந்தச் சிறிய அளவு தனிமம் பயனற்ற, கிட்டத்தட்ட 2000 இராத்தல் அளவு பாறைகளில் சிறிய 32பொடிகளாகக் கலந்து கிடக்கின்றது. இந்நிலையிலிருப்பதைத் தனியாகப் பிரித்தெடுப்பதென்பது ஓர் அரக்க வேலையால் தான் இயலும். முதலில் பாறைகள் பெரிய பொறிகளினுல் உடைத்து நசுக்கப் பெறுகின்றன. இம்மணல் வேதியல் கிரியைக்குத் தயாராக இருக்கின்றது. கணிப்பொருள் கார்னோடைட்டாக இருக்கும் பொழுது இம்மணலே உப்புடன் சேர்த்து 1000 F சூட்டு நிலையில் சுடுகின்றனர். அதன் பிறகு அது நீரினால் கழுவப் பெறுகின்றது. பிறகு அது அமிலத்துடன் சேர்த்தல், சூடாக்குதல், உலர்த்துதல் போன்ற செயல்களுக்கு மாறிமாறி உட்படுத்தப் பெறுகின்றது. இவ்வாறு பல நாட்கள் அதனைப் பல்வேறு கிரியைகட்கு உட்படுத்திய பிறகு, கிடைக்கும் பொருள் சாம்பல் நிறமும் கருப்பு நிறமும் கொண்ட பொடியாகக் காட்சியளிக்கின்றது. இதுதான் பண்படா யுரேனியம் ஆக்ஸைடு ; ஒவ்வொரு டன் யுரேனியக் கணிப் பொருள்களினின்றும் சில இராத்தல் பொடியாகக் கிடைப்பது. இவ்வாறு பொடியாகக் கொண்டு வருவது முதல் நிலை.

இதற்கு அடுத்த நிலையில் இப் பொடியிலிருந்து பிற உலோகங்களை நீக்கி அவை சிறிதும் இல்லாமல் தூய்மையாக்கப் பெறுகின்றது. பல வேதியற் கிரியைகளுக்கு உட்படுத்தி தூய்மையாக்கினாலும் சில உலோகங்கள் யுரேனியத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எனினும், பல தடவைகள் மீண்டும் மீண்டும் ஒரளவு இல்லாமல் அமிலத்துடன் சேர்ப்பதால் அவை நீங்குகின்றன. இப்பொழுதுள்ள தூய்மையான யுரேனியம் ஆக்ஸைடு கபில நிறமுள்ளதாகக் 33 காணப்படுகிறது. இதன் பிறகு, யுரேனியம் ஆக்ஸைடிலிருக்கும் உயிரியம் நீக்கப் பெறுதலும் புளோரின்34 சேர்க்கப் பெறுதலும் நடைபெறவேண்டு ம். இப்பொழுது யுரேனியம் புளோரைடு உண்டாகிறது; இது


32பொடிகள்- particles. 33கபில நிறமுள்ள - brown. 34புளோரின்- fluorine