பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு எரியைகள்

89

இரண்டு ஓரிடத்தான்களையும் வாயு பரவல் மூலம் பிரிக்க முடியும்.

ஒரு பொருளின் எடை என்பது என்ன? ஒரு பொருண்மையைப் பூகவர்விசை இழுக்கும் அளவே அதன் எடை என வழங்கப்பெறுகின்றது. எந்த ஒரு வாயுவின் அணுத்திரளைகளின் வேகமும் அவற்றின் பொருண்மைக் கேற்றவாறு மாறுபடும். அஃதாவது, அணுத் திரளேயின் பொருண்மை அவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும். உயர்ந்த சூட்டு நிலைகளில் அவற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு சூட்டு நிலையில் குறைவான பொருண்மை யைக் கொண்ட அணுத்திரளைகளும் அணுக்களும் விரைந்து அசையும். இதை ஓர் எடுத்துக்காட்டால் நன்கு விளக்கலாம். அறுவடை செய்து போரடித்த தானியத்தைப் பதரினின்றும் வைக்கோல் துணுக்குகளினின்றும் பிரிப்பு தற்கு உழவன் என்ன செய்கிறான்? அவற்றைக் காற்றில் துாற்றுகிறான். கனமான தானியமணிகள் ஒரிடத்திலும் இலேசான பதர் முதலியவை பிறிதோரிடத்திலுமாகச் சேர்கின்றன. இதனை யொத்த ஒரு தத்துவம்தான் யுரேனிய ஓரிடத்தான்களைப் பிரிப்பதில் பயன்படுகின்றது.

சாதாரண சூட்டு நிலையில் யுரேனியம் ஹெக்ஸாபுளோ ரைடு மிகவும் அரிக்கும் தன்மையுள்ள ஒரு திடப் பொருள். ஆனால், உயர்ந்த சூட்டு நிலைகளில் அது வாயுவாக ஆவி யாகிறது. இந்த வாயுக் கலவை பல இலட்சக்கணக்கான நுண்ணிய துவாரங்களையுடைய திரையினூடே செலுத்தப் பெறுகின்றது. இரண்டு ஓரிடத்தான்களும் திரையைக் கடக்கின்றன. வாயு பரவல் முறையில் இது நடைபெறுகின்றது. ஓரிடத்தில் ஊதுவத்தியைக் கொளுத்தி வைத் தால் அதன் மணம் விரைவில் எங்கும் பரவுகிறதல்லவா ? அதனே யொத்த முறையில்தான் வாயு நிலையிலுள்ள யுரோனிய ஓரிடத்தான்களும் திரையைக் கடந்து அடுத்த பக்கத்தை அடைகின்றன. ஆனால், சற்றுக் குறைந்த பொருண்மையையுடைய யு-285ன் அணுத்திரளைகள் சற்று அதிகப் பொருண்மையையுடைய யு-288ன் அணுத்திரளே