பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அணுவின் ஆக்கம்

அணுக்கள் சற்று விரைந்து முன்னேறிச் செல்லுகின்றன. குழாய்களின் மறு முனையில் வெளிவரும் வாயுவில் யு-235 அணுக்கள் அதிகம் இருக்கும். இந்த வாயு பம்புகளால் இழுக்கப் பெற்றுப் பிரிக்கப்பெறுகின்றது. வேதியல் நிபுனர்கள் யு-235 வாயுவிலிருந்து அதில் கூடியுள்ள புளோரினேப் பிரித்து நீக்கி யுரேனியத்தைத் தனிப்படுத்துகின்றன.

தொழிற்சாலையிலுள்ள குழல்களும் பிற அமைப்புக்களும் சிறிதும் ஒழுகாமல் இருக்கவேண்டும். காரணம், இந்த வாயு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இக்குழல்கள் சரியாக உள்ளனவா என்று கவனிப்பவர்கள் மிதிவண்டிகளில்[1] சென்று கண்காணிப்பர்.

மூன்று முக்கிய எரியைகள் : யு-235 உடனடியாகத் தேவைப்படாவிட்டாலும் அதை நெடுங் காலத்திற்குச் சேமித்து வைக்கலாம். ஏனெனில், அதன் அரை-வாழ்வு நாற்பது இலட்சம் யாண்டுகள். இன்னும், யுரேனியம்-235 தான் அடிப்படையான எரியை. காரணம், அது ஒன்றுதான் இயற்கையில் கிடைப்பது. அதை நேரடியாக ஆற்றலை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தலாம் ; அல்லது தொடர்நிலை விளைவில் பயன்படுத்தி யுரேனியம் - 238ஐ புளுட்டோனியமாக மாற்றலாம். புளுட்டோனியம் எளிதில் பிளவுறக்கூடிய இரண்டாவது அணு எரியையாகும். இதுவும் நீண்ட அரை-வாழ்வைப் பெற்றுள்ளது. புளுட்டோனியத்தை அணு உலை கொண்டுதான் உற்பத்தி செய்யமுடியும். இது எங்ஙணம் உற்பத்தி செய்யப்பெறுகின்றது என்பதை அணு உலையைப் பற்றிக் கூறுமிடத்துக் காண்போம். அணுவிலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்யும் தொழில் பெருகினால், அணு உலைகளேக் கொண்டே தோரியத்தையும் எளிதில் பிளவுறக் கூடிய யு-288 ஆக மாற்றலாம். யு-283 மூன்றாவது அணு எரியை; முற்கூறப்பெற்ற ஏனைய இரண்டைப்போல் இதுவும் எளிதில் பக்குவிடும் தன்மையுடையது.


  1. மிதிவண்டி - cycle.