பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அணுவின் ஆக்கம்


கும்பொழுது நீளும் தன்மையுள்ள மோதுதல்[1] நிகழ்கின்றது. பொது இயல் மின்னிகள் தம்முடைய ஆற்றலின் ஒரு பகுதியைத் தனிப்பானுக்களித்து குறைந்த வேகத்தில் பின்னோக்கித் திரும்பி[2] வருகின்றன. இவ்வாறு குறைந்த வேகத்துடனுள்ள பொது இயல் மின்னிகளே யுரேனிய அணுக்கள் சிறைப்படுத்தித்[3] தொடர்நிலை விளைவு தொடர்ந்து நடை பெறத் துணை புரிகின்றன.

பொது இயல் மின்னி தாக்கும் துணுக்கு பொது இயல் மின்னியைவிட அதிக பளுவானதாக இல்லாதிருந்தால், மேற்குறிப்பிட்ட நீளுந்தன்மையுள்ள மோதுதல்கள் சிறந்த திறனுடன் நடைபெற்றுப் பொது இயல் மின்னிகளின் வேகத்தைக் குறைக்கும். ஆகவே, தணிப்பானாக இருக்கும் பொருள்களின் அணுக்கள் மிகவும் சிறிதாக இருக்கவேண்டும் என்றாகின்றது. இன்று சிறந்த தனிப்பானாகப் பயன்படுவது கனநீர்[4] என்பது. இது நீரிய ஓரிடத்தானின் ( கன நீரியம் :)[5] ஆக்ஸைடாகும். இதன் அணுக்கள் இரண்டு அலகுகளைப் பெற்றுள்ளன; சாதாரண நீரியத்தின் எடை ஒரலகேயாகும். சாதாரண நீர் என்பது நீரியத்தின் ஆக்ஸைடாகும். ஆனால், இயற்கையில் பளுவான வடிவத்திலுள்ள ஓரிடத்தான் மிகச்சிறிய விகிதத்தில் (5000-ல் ஒரு பாகம்) கலந்திருக்கின்றது. இந்தப் பளுவான ஓரிடத்தானைப் பிரித்தெடுக்கும் கிரியையில் அதிகப் பணச் செலவாகிறது. ஆகவே, ஒரு குவார்ட் அளவுள்ள கனநீர் 100 டாலர் விலைவாகிறது. தணிப்பானாகப் பயன்படுவதற்கு அதிக அளவு கனநீர் தேவைப்படுவதால், பெரும்பாலும் இப்பொருளைத் தனிப்பானாகப் பயன்படுத்துவதில்லை.

நடைமுறையில் பென்சில் கரிதான் தணிப்பானாகப் பயன்படுத்தப் பெறுகின்றது. பென்சில் கரி என்பது 12 அலகுகளைக் கொண்ட கரியணுக்களாலான ஒரு பொருள். பென்சில் கரியின் அணு பொது இயல் மின்னியைவிட

  • £65th 553rgoint sirer Gudrā āsē பின்ளுேக்கித் திரும்பு சிறைப்படுத்து o assar $ř “ ssir Éfush-heavy hydrogen
  1. நீளும் தன்மையுள்ள மோதுதல் - elastic collision.
  2. திரும்பி - bounce.
  3. சிறைப்படுத்தி -capture.
  4. கன நீர் - heavy water.
  5. கன நீரியம் - heavy hydrogen.