பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு உலைகள்

101


னின்றும் எழும் சூட்டுநிலை கட்டுக்கடங்காமல் போகாதிருக்க சூட்டினையும் அகற்றவேண்டும்.

முதன்முதலாக நிறுவப்பெற்ற அணு உலைகளில் காற்றைச் சுழன்றுவரச்செய்து சூட்டை அகற்றினர். இன்து சில பெரிய அணு உலைகளில் கரியமில வாயுபோன்ற வாயுக் கள் அதிக அழுத்தத்தில் பயன்படுத்தப் பெறுகின்றன. பிறவற்றில் அதிக அளவுள்ள நீர் பல குழல்களில் உலை முழு வதும் சுற்றி வருமாறு அமைத்துச் சூடு குறைந்த நிலையில் இருக்குமாறு செய்யப்படுகின்றது. ஒரு பெரிய உலையில் ஒர் ஆறு முழுவதும்கூட தேவைப்படலாம். புளுட்டோனியம் உற்பத்திக்காகவும், பிரத்தியேகமான ஓரிடத்தான்களின் உற்பத்திக்காகவும், வீடு கட்டும் பொருள்களைப் பொது இயல் மின்னிகள் பாதிக்கின்றன என்று ஆராயும் ஆராய்ச்சியிலும் பயன்படும் அணு உலைகளில் வெளிவரும் சூடு முழு வதும் இவ்வாறு வீணுக்கப்பெற்றது. அமெரிக்காவில் ஹான் போர்டு என்னுமிடத்தில் நிறுவப்பெற்ற யுரேனிய அடுக்கில் வெளியான சூட்டினைக் கொலம்பியா ஆற்றுநீரில் கரைத்து வீணாக்கினதை மேலே கண்டோமல்லவா?

ஆனால், அணுவாற்றலின் அடிப்படையில் அமைந்த மின்சார உற்பத்திச்சாலையில் இந்தச் சூடு முழுவதையும் கைப்பற்றி அதனைப் பயன்படுத்துதல் வேண்டும். அந்தச் சூட்டினை அணு உலையின் உட்பகுதியினின்றும் ஒரு கொதிகலன்[1] அல்லது சூட்டினைப் பயன்படுத்தும் வேறு சாதனத் திற்கு மாற்றப்பெறுதல் வேண்டும். காற்றினைக்கொண்டு சூட்டினைச் சேகரித்து வெளியில் கொண்டுசெல்லுவதைத் திறனுகச்செய்ய இயலாது. நீர் மிகக் குறைந்த சூட்டு நிலையிலேயே கொதிப்பதால், அது அவ்வளவாகப் பயன்படுவதில்லை. பாதரசம் போன்ற உயர்ந்த சூட்டு நிலையில் கொதிக்கக்கூடிய திரவங்களேப் பயன்படுத்தலாம்; குறைந்த பரிமாண முள்ள திரவத்தைக்கொண்டு அதிக அளவு சூட்டினை எளிதில் வெளியேற்றலாம். அருகிய நிலையிலுள்ள சோடியமும் பொட்டாசியமும் கலந்த கலவை உலோகம் இதற்குப் பயன்படுத்தப்பெறுகின்றது.


  1. கொதிகலன் - boiler.