பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு உலைகள்

108


இந்தக் காப்புறைதான் மிகச் சிறியதொரு அணுகி உலையையும் மிகப்பெரிய வடிவுடைய தாக்குகின்றது. இதனால் தான் அணுஉலையைக் கொண்டு தானோடிகளே இயக்க முடிகிறதில்லை; சிறிய வீடுகளிலும் சூடு உண்டாக்கப் பயன்படுத்த இயலுவதுமில்லை. பெரிய ஆற்றல் நிலையங்களில்தான் பளுவான காப்புறை பயன்படுவது சாத்தியமானது.

புளுட்டோனிய உற்பத்தி : இன்று பல்வேறு வித அணு உலைகள் நடைமுறையில் செயற்பட்டு வருகின்றன. அவற்றுள் முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருப்பதும் சாதாரண யு - 238ஐ புளுட்டோனியமாக மாற்றும் அணு உலைதான் என்று சொல்லவேண்டும். இதில் மின்னாற்றலை உற்பத்தி செய்வது அவ்வளவு முக்கியமானதன்று. புளுட்டோனியம் என்ற தனிமம் இயற்கையில் கிடைப்பதில்லை. ஓர் அணு உலையைக் கொண்டு யு-288லிருந்து புளுட்டோனியம் உற்பத்தி செய்யப் பெறுகின்றது. யு-285ஐப் போலவே புளுட்டோனியமும் சிறந்த பக்குவிடும் பொருள் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு பயன்படாத யுரே னியம்-238 பயன்படும் பொருளாக ஆக்கப் பெறுகின்றது. இதனுல் உலகிலுள்ள அணு எரியை 140 மடங்கு பெருக்கப் பெறுகின்றது என்பதை நாம் மகிழ்வுடன் அறிந்து கொள்ளுகின்றோம்.

கொள்கையளவில் இது மிகவும் எளிது என்பதை முன்னர்க் கண்டோம். யு-285 சிதைந்தழிவதிலிருந்து வெளிப்படும் பொது இயல் மின்னி ஒன்றினை யு-288 விழுங்கி யு-239 ஆகிறது. இந்த யு-289 தானாக மிக விரைவில் புளுட்டோனியமாக மாறுகின்றது. நடை முறையில் இம்மாற்றத்தைப் பயனுள்ள முறையில் சமாளிப்பதற்கு மிகுந்த சாமர்த்தியம் வேண்டும். அஃதாவது, யுー285 லிருந்து வெளிப்படும் பொது இயல் மின்னிகளனைத்தை யும் கூடிய வரை யு-288ன் அணுக்கள் விழுங்கும்படி செய்தல் வேண்டும். ஒவ்வொரு யு-285ன் கருவும் வெடிக்கும் பொழுது இரண்டு அல்லது மூன்று பொது இயல் மின்னிகள் உண்டாகின்றன. இவற்றுள் ஒன்று மற்றொரு யு-285ன்