பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அணுவின் ஆக்கம்


கருவினே வெடிக்கச்செய்து கிரியைத் தொடர்ந்து நடை பெறச் செய்யவேண்டும். எரிவதற்குப் பயன்படும் எரியையைவிட அதிகமான எரியை உண்டாக்கப் பெறவேண்டு மானால் மூன்றினுள் எஞ்சியிருக்கும் ஒன்று அல்லது இரண்டு பொது இயல் மின்னிகளும் புளுட்டோனியம் உற்பத்தி செய்வதில் திறனுள்ளவைகளாக இயங்கவேண்டும். அஃதாவது, பொது இயல் மின்னிகளின் இழப்பு நேரிடக் கூடாது; தணிப்பானையும் மிகப் பாதுகாப்பாகக் கையாண்டு யு-238ன் அணுக்கள் சிறையிடுவதற் கேற்றவாறு பொது இயல் மின்னிகளின் வேகத்தைத் தணிக்கவேண்டும். புளுட்டோ னியம் யுரேனியத்துடன் கலந்து உள்ளகத்தில் திரண்டு கொண்டேயிருக்கும். ஒரு சமயத்தில் உள்ளகத்தை அகற்றி இரண்டு பொருள்களையும் வேதியல் முறையில் பிரிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இவ்வாறு செய்வது மிகவும் கஷ்டமான செயல். காரணம், உள்ளகத்திலுள்ள வேறு துணுக்குகளின் கதிரியக்கம் இதனைக் கடுமையான தாகச் செய்து விடுகின்றது. இதனைப் பின்னர்க் காண்போம்.

அணு உலைகளின் ஆரம்ப நிலை: அணு உலைகள் அமைக்கப் பெற்ற வரலாற்றைக் கவனித்தால், முதன்முதலாக அவை தொடர்நிலை விளைவு சரிவர இயங்குமா என்று கண்டறிவதற்காகவே நிறுவப் பெற்றன. அதன்பிறகு அணுகுண்டுகளில் பயன்படும் புளுட்டோனிய உற்பத்திக்காகவே அவை அமைக்கப்பெற்றன. அதன்பிறகுதான் பல்வேறுவித அணு உலைகள் நிறுவப் பெற்றன. அவையாவும் அணு உலையின் தத்துவங்களைச் சீரிய முறையில் பரிசீலித்து அணு பெளதிக வளர்ச்சிக்காக அறிஞர்கள் நிறுவியவை. எல்லா அணு உலைகளிலும் மின்னுற்றல் உற்பத்தியாயிற்று; சிலவற்றில் அது மிகக் குறைவாகத்தான் இருந்தது. அவை ஒவ்வொன்றிலும் உண்டான மின்னாற்றலைப் பயன்படுத்த, முடியும் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக உண்டாக வில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பயனுள்ள அணு உலை : எதிர் காலத்தில் மிகவும் பயன்படக்கூடிய அணு உலை பிரீடர் வகை உலையாகும். இத்-