பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு உலைகள்

105


தகைய அமைப்பு உலை யொன்று போர்க் காலத்தில் அமெரிக்காவில் நிறுவப் பெற்றது; அது புளுட்டோனிய உற்பத்திக்கு மட்டிலும்தான் பயன்படுத்தப் பெற்றது. ஆனால், ஆர்க்கான் தேசிய ஆய்வகத்தில்[1] முதன் முதலாக அமைக்கப்பெற்ற அணு உலையில்தான் மின்னாற்றலையும் பரிசோதனை மூலம் காட்டினர்; புதிய பக்குவிடும் எரியையும் உண்டாக்கப் பெற்றுக் காட்டப் பெற்றது. முதன் முதலாக அமைத்த பிரீடர் வகை அணு உலை[2] 1400 கிலோவாட் சூடும் 170 கிலோ வாட் மின்குற்றலும் வெளிப்பட்டன. இதையே சற்று முன்னேற்ற முறையில் அமைக்க இருக்கும் அணு உலையில் 82,500 கிலோ வாட் சூடும் 15,000 கிலோ வாட் மின்னாற்றலும் உண்டாக்கலாம் என்று கூறுகின்றனர். இது இன்னும் திட்ட நிலையில்தான் உள்ளது; விரைவில் இது நடைமுறைக்கு வருதல் கூடும். எதிர்காலத்தில் இம்மாதிரி அமைப்புதான் எங்கும் பெரு வழக்காக வரும் மின்னாற்றல் நிலையமாகும். பரிசோதனை நிலையிலுள்ள இதிலிருந்து எதிர் காலத்தில் அமைக்கப் பெறும் மின்னாற்றல் நிலையங்களைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் எவ்வாறு இயக்கலாம் என்பதைக் கண்டறியலாம்.

பிரீடர் வகை அணு உலை : புளுட்டோனிய உற்பத்தியில் பயன்படும் அணு உலையில் சூடு உற்பத்தியாகின்றது என்பதையும், சூட்டையும் மின்னாற்றலையும் உற்பத்தி செய்யும் அணு உலையில் புளுட்டோனியத்தையும் உற்பத்தி செய்யலாம் என்பதையும் நாம் அறிவோம். இந்த இரண்டையும் ஒரே அணு உலை உற்பத்தி செய்யுமாறு அமைத்து விட்டால் அது நிறைந்த பலனே விளைவிக்கும் என்பதற்கு ஐயமில்லை. இத்தகைய அணு உலையில் பேரளவில் பயன்படும் மின்னாற்றலையும் உண்டாக்கலாம்; புளுட்டோனியத்தையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். பயன்படும் ஒவ்வொரு யு-285 அணுவிற்கும் ஒவ்வொரு புளுட்டோனிய அணுவை உற்-


  1. ஆர்க்கான் தேசிய ஆய்வகம் - Arggonne National Laboratory.
  2. பிரீடர் வகை- Breeder type