பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணு உலைகள்

111


படுகின்றது. இப்பொருள் இயற்கை யுரேனியத்தில் 0.7 சதவிகிதம்தான் இருக்கிறது. ஆனால், நல்ல காலமாக யு-238ம் தோரியமும் செயற்கை முறையில் மாற்றப் பெறுகின்றன. அணு உலைகள் எதிர்காலத்தில் பெருகுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்,

4. ஏனைய உலகளில் எரியும் தீயைக் கண்ணால் காணலாம். அணு உலைகளில் உண்டாகும் தீ கண்ணுக்குப் புலப்படாது. அணு உலை செயற்படுங்கால் கண்ணுக்குப் புனாகாத கதிரியக்க வீச்சுக்கள் உண்டாகின்றன. இக்கதிர்கள் புதிர்க் கதிர்களைப் போன்றவை. இவை உயிருக்கும் ஆபத்து உண்டாக்க வல்லவை ; பிற பொருள்களையும் கேடுறச் செய்ய வல்லவை. எனவே, இத் தீயைச் சுற்றிலும் காரீயம் அல்லது கப்பியாலான காப்புறை அமைக்க வேண்டியிருக்கின்றது. அன்றியும், அணு உலையில் எஞ்சும் சாம்பலும் பல நீண்டகாலம் 'சூடாகவே (கதிரியக்கமுள்ளதாகவே) இருக்கின்றது. அஃதாவது, பல கதிரியக்க ஓரிடத்தான்கள் அதிலிருக்கின்றன. இவற்றைப் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும்.

5. ஏனய உலைகளில் தீயிடுவதில் யாதொரு நிபந் தனையும் இல்லை. அணு உலையில் ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவு எரியை இருந்தால் தான் அதனைச் செயற்படச் செய்ய இயலும். இந்தக் குறிப்பிட்ட அளவைத் தறுவாய் நிறை 28 என்று வழங்குவர். தறுவாய் நிறைக்குக் குறைவான பொரு னில் தொடர்நிலை விளைவு சரிவர நிகழாது. இந்நிறைக்கு அதிகமான பொருளில் ஒரு பொது இயல் மின்னி தற்செயலாக வந்தடைந்தாலும் போதும் ; தொடர்நிலை விளைவு தொடர்ந்து நடைபெற்று விடும்.

அணு எரியைகளின் நன்மைகள்: ஏனைய உலைகளில் பயன்படும் எரியைகளைத் தொலைவிடங்களிலிருந்து கொண்டு வருவதற்குப் பெருஞ்செலவு ஏற்படுகின்றது. எடுத்துக் காட்டாக சென்னை மின்னாக்க நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி வடநாட்டிலிருந்து வருகிறது . இதற்கு வண்டிச்-


28தறுவாய் நிறை - critical mass.