பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. மின்னாற்றல்


பொருளாதார உலகில் பணத்தின் மகிமையை நாம் அறிவோம். உலகிலுள்ள எந்தப் பொருளையும், எந்தச் சொத்தையும் ரூபாய் அணா பைசாவில் பேசுகின் றோம். மேல் நாடுகளில் டாலர் கணக்கில் பேசுகின்றனர். டாலர் என்பதும் பணந்தான். எல்லாப் பொருள்களையும் பணமாக மாற்றிவிடலாம்; இந்தப் பணத்தைக் கொண்டு உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் வாங்கலாம். 'பணம் பத்துவிதம் செய்யும்’ என்பது பழமொழியல்லவா ? பணம் பொருளாதார உலகைப் பிணைத்து ஊடுருவிச் செல்லும் ஓர் அற்புதச் சாதனம் ; பொருள் உலகினை விருப்பப்படி ஆட்டி வைக்கும் வியத்தகு கருவி. இங்ஙனமே, ஆற்றல் - உலகினையே வியப்படையச் செய்வது மின்னாற்றல்; இது ஆற்றல் மன்னனாக விளங்குகிறது. நவீன உலகையே ஆட்டி வைப்பது மின்னாற்றல் என்றால், அது மிகையன்று. நீரினால் பெறும் ஆற்றல், எண்ணெயிலிருந்து பெறும் ஆற்றல் ஆகியவற்றை மின்னாற்றலாக மாற்றிவிட்டால் அதை விருப்பமான இடங்களுக்குக் கொண்டு செல்லலாம். இன்று உலகிலுள்ள எல்லாத் தொழிற்சாலைகளிலும் மின்னாற்றல்தான் பயன்படுகின்றது. நவீன வாழ்க்கையில் மின்னாற்றல் பயன்படாத துறையே இல்லை என்று கூடச் சொல்லலாம். அது நீரைப்

53ー9