பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அணுவின் ஆக்கம்


போல் நமது வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது.

இன்று நாம் மின்சார ஊழியில் வாழ்கின்றோம்; இன்றைய உலகம் மின்சார உலகம். மின் விளக்குகள், மின் விசிறிகள், நீர் இறைக்கும் பொறிகள், நெல்லை உமி போகக் குத்திப் புடைக்கும் இயந்திரங்கள், டிராம் வண்டி, மோட்டார் மின்சார வண்டி, தந்தி, தபால், வானொலி, ஒலிபெருக்கி முதலிய அனைத்தும் மின்னாற்றலாலன்றோ இயங்குகின்றன ? இராவணத் தர்பாரில்தான் கோடையில் பணி நிலையையும் மாரியில் வெப்ப நிலையையும் உண்டாக்கிக் கொண்ட செய்தியைக் காண்கின்றோம். ஆனால், இன்று வீட்டையும் புகை வண்டிப் பெட்டிகளையும் கோடையிலும் குளிர்-பனி நிலக்கு வைத்துக்கொள்ளும் அமைப்பு வந்து விட்டது. மின்னாற்றலன்றோ இதற்குச் சாதகமாக இருக்கின்றது? இன்னும் அட்டில் தொழில், துணி துவைத்தல், பால் கறத்தல், தலை மயிரை ஒப்பனை செய்து கொள்ளல் போன்ற அன்றாடத் தொழில்களிலெல்லாம் மின்சாரம் பங்கு கொள்ளுகிறது. மின்சாரம் அங்கிங்கெனாதபடி எங்கும் காட்சியளிக்கும் அற்புத சாதனமாக விளங்குகிறது. மின்சாரம் இல்லையானால் நாகரிக உலகமே இல்லே என்று சொல்லிவிடலாம்.

மின்னாற்றலின் இன்றியமையாமை : புளூ ட்டோனிய அடுக்கிலும் அணு உலைகளிலும் ஏராளமான வெப்பம் வெளியாகிறது என்பதை முன்னர்க் கண்டோம். இந்த வெப்பத்தால் நீராவியை விளைவித்து அந்நீராவியால் மின்னாக்கிகளை இயக்கி மின்னாற்றலைப்1 பெறலாம். எல்லா நாடுகளிலுமுள்ள ஒருவரின் சராசரி வருமானத்தையும் அவர் சராசரி செலவழிக்கும் ஆற்றலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அணுவாற்றலிலிருந்து மின்னாற்றலைப் பெறும் வழி வகைகளே வகுக்க வேண்டியதன் இன்றியமையாமைப் புலனாகும்; அணுவாற்றலிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியம் தெளிவாகும். இன்று நாம் நிலக்கரி, பெட்ரோலியம், மலையிலிருந்து இறங்கும் நீர்


1மின்னாற்றல் - power