பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மின்னாற்றல்

117

 குறைகின்றது. இக்காரணங்களால்தான் ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் அணுவாற்றலிலிருந்து மின்னாற்றலின் உற்பத்தியைப் பெருக்குவதில் பெருங் கவனம் செலுத்தி வருகின்றது.

நீராவி உற்பத்தி : நிலக்கரியிலிருந்து பெறும் வெப்பத்தைக் கொண்டு நீரை ஆவியாக்கி அதனைக்கொண்டு மின்னாக்கப் பொறியை இயக்கி மின்னாற்றலைப் பெறுவது போலவே, அணு உலைகளிலிருந்து பெறும் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம். அணு உலைகளிலிருந்து வெளிவரும் சூட்டை 'குளிர்ப்பான்’[1] ஏற்றுக் கொள்கிறது. இந்தக் குளிர்ப்பானிலிருந்து வெப்பத்தைப் பெற்று அதனே மின்னாற்றலாக மாற்றவேண்டும். தொலைவிடத்தில் மின்னாற்றலைப் பயன்படுத்துவதற்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்னாற்றலைப் பெறும் சென்னையிலுள்ளது போன்ற மின்னாற்றல் நிலையங்களில் வெப்ப ஆற்றல்தான் மின்னாற்றலாக மாற்றப் பெறுகின்றது. இதில் வெப்ப ஆற்றல் பெறும் மூலத்தில்தான் வேறுபாடு உள்ளது.

நவீன மின்னாற்றல் நிலையங்களில் பெரிய உருவிலமைந்த மின்னாக்கப் பொறிகளிலிருந்து மின்னாற்றல் உற்பத்தி செய்யப்பெறுகின்றது. மேலிருந்து விசையாக விழும் நீர்வீழ்ச்சியின் நீர்த் தாரையின் அமுக்கத்தைக்கொண்டு நீர்ப்பல் சக்கர உருளைகளை[2] இயக்கியோ அல்லது நீராவியின் சூட்டையும் அமுக்கத்தையும் கொண்டு நீராவிப் பல்சக்கர உருளைகளை இயக்கியோ இந்த மின்னாக்கப் பொறிகள் இயங்க வைக்கப்பெறுகின்றன. நீராவியைப் பயன்படுத்துங்கால் நீராவியின் அமுக்கமும் சூட்டுநிலையும் அதிகமாக இருந்தால், திறன் அதிகப்படுகின்றது. சாதாரணமாக நடை முறையில் சதுர அங்குலத்திற்கு 200 இராத்தல்கள் அமுக்கத்திலுள்ள நீராவியால் இயங்கும் நீராவிப் பொறி-


  1. 5 குளிர்ப்பான்- coolant
  2. 6 நீர்ப்பல் சக்கர உருளைகள் - waterturbines