பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னாற்றல்


 கிறது; நிலக்கரி-நீராவி நிலையத்தை அமைக்கும் செலவை. விட மிக அதிகமாகவே உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இன்று நடைமுறையிலுள்ள நிலக்கரி நிலையத்தை அமைப்பதில் ஆகும் செலவில் அணு நிலையத்தை அமைப்பதில் ஆகும் செலவு இரண்டு மடங்கு ஆகும் என்று மதிப்பிடப் பெற்றிருக்கின்றது. அந்நாடுகளில் இன்று அமைப்பு நிலையிலுள்ள 60,000 கிலோவாட் அணு உலை ஒன்று 30,000,000 டாலர் செலவில் அடங்கும் என்று கணக்கிட்டிருக்கின்றனர். ஆனால், நிலக்கரி-எரி நிலையத்தை[1]அமைப்பதற்கு 7,000,000 டாலர்தான் செலவாகும். நாளடைவில் அணு உலைகளை அமைப்பதில் அனுபவமும் ஆராய்ச்சியும் மிக மிக அணு உலைகளின் அடக்க விலை நிச்சயம் குறையும் என்பதற்கு ஐயமில்லை. இன்றைய நிலையில் நிலக்கரி ஏராளமாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடிய இடங்களில் அணு ஆற்றல் நிலையங்களிலிருந்து பெறும் மின்னாற்றலின் விலை நிலக்கரி-எரி நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்னாற்றலின் விலையைவிட ஒரளவு அதிகமாக இருக்கலாம். ஆனால், நிலக்கரி கிடைக்காத இடங்களில் அது நிச்சயம் குறைவாகவே இருக்கிறது. மலிவாகக் கிடைக்கும் நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு 10 டாலருக்கு மேல் போகக் கூடாது என்பதை நினைவில் வைத்து இக்கணக்கீடு செய்ய வேண்டும்.

அணுவிலிருந்து கிடைக்கும் மின்னாற்றலை இப்பொழுது தான் தொழில் துறையிலும் வணிகத் துறையிலும் பயன் படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இங்கிலாந்து, கானடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் வேறு காரியங்களுக்காக நிறுவப்பெற்ற சோதனை அணு: உலைகளில்-(எ-டு.) அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள பிரீடர் அணு உலை[2]- தம் அமைப்புக்களுக்கும் அருகிலுள்ள கட்டடங்களுக்கும் வெளிச்சத்தையுண்டாக்க மின்னாற்றல் உற்பத்தி செய்யப்பெற்று வருகின்றன். 1954-ஆம் ஆண்டு


  1. 16 நிலக்கரி-எரிநிலையம் - coal-burning plant
  2. 17 பிரீடர் அணு உலை- breeder reator.