பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்கம்

127


ஹென்றி பெக்குரல் ஒளிரும் பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு முறையாக ஆராயவேண்டும் என்று கருதி, யுரேனியக் கனிப்பொருள்களை ஆராய்ந்த பொழுது இந்நிகழ்ச்சியைக் கண்டறிந்தார். பெக்குரல் கண்ட நிகழ்ச்சியை இரண்டாண்டுகள் கழித்து குயூரி தம்பதிகள் கண்டறிந்த ரேடியம் என்ற தனியத்திடம் தெளிவாகக் காணலாம். கதிரியக்கமள்ள எல்லர அணுக்களுமே இயல்பாகவே நிலைத்த தன்மையடையன அல்ல ; அவை சதா சிதைந்து அழிந்துக்கொண்டே[1] இருக்கும். இவ்வாறு சிதைந்து அழியும் செயல் முழுதும் தானாகவே நடைபெறக்கூடியது. எந்தவிதச் சாதனத்தைக் கொண்டும் அதன் வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ இயலாது. வெளித் தூண்டுதல் காாலும் சற்றும் மிகுதிப்படாதது; பிற தடைகளாலும் சற்றும் குறைவுபடாதது. அறிவியலறிஞர்கள் சாதாரணமாகக் கையாளும் வெப்ப ஆற்றல், மின்னாற்றல் வேதியற் பொருள்கள் முதலியவை கதிரியக்கக் கிளர்ச்சியைப் பாதிக்கும் வன்மையற்றிருந்தன. மனிதனுடைய அகந்தையையும் இறுமாப்பையும் அது சிறிதும் கருதாது பெருவழியில் தன் விருப்பப்படி இயங்கும் தன்மையைப் பெற்றிருந்தது. கதிரியக்கத்தின் பெருமையை, அதன் விந்தையை, கதிரியக்கப் பாதையின் அருகில் இருந்துகொண்டு மனிதனால் கண்டறிய முடிந்ததேயன்றி அதைக் குறித்து வேறு எதையும் ஆற்றவல்ல திறமை அவனிடம் அமையவில்லை.

ஆற்றல் வாய்ந்த தொலை நோக்காடியின் துணைகொண்டு களங்கமற்ற வானவெளியில் உலாப்போகும் எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராய்ந்துவரும் வானநூற் புலவர்கள் அவற்றில் நிகழும் நிகழ்ச்சிகளை எள்ளளவும் மாற்ற இயலுவதில்லை. எனினும், அந்த உடுக்களில் நடை பெறும் நிகழ்ச்சிகளை அவர்களால் கண்டறிய முடியும். எடுத்துக்காட்டாக, கோள்களின்[2] கதியையும் அவை குறிப்பிட்ட காலங்களில் இருக்கும் இடங்களையும் கணக்கிட்டுக் கூற முடியும்; சுட்டிக் காட்டவும் இயலும். அங்ஙனமே


  1. சிதைந்தழிதல் - disintegration.
  2. கோள்கள் - planets