பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அணுவின் ஆக்கம்


பௌதிக அறிஞர்களும் கதிரியக்கத் தனிமங்களின் செயல்களைத் தம்மால் பாதிக்கச் செய்ய இயலாவிடினும், அவற்றை அணுகி நுணுகி அறியும் திறமையைப் பெற்றிருந்தனர். அவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும். மிகவும் கவனமாகக் குறித்து வைத்தனர். அவற்றை மிகக் கவனத்துடன் ஆராய்ந்தவர்களுள் தலை சிறந்தவர் ரதர் போர்டு[1] என்ற அறிஞர் பெருமான்.

மூன்று கதிர்கள் : யுரேனியம் ஆட்டம் கொடுக்கும் நிலையில் சில ஒளிகள் வீசுவதனை அறிவியலறிஞர்கள் கண்டனர். இந்த ஒளிகள் கண்காணா ஒளிகளே. இவை மூன்று வகைக் கதிர்களாக வெளிவருகின்றன. அவற்றை அறிவிய

இடப்புறமுள்ள படத்தில் நடுவிலிருப்பது காமா - கதிர் : இடப்புறமிருப்பது பீட்டா - கதிர்; வலப்புறமிருப்பது ஆல்பா - கதிர். வலப்புறமுள்ள படத்தில்; அவை வந்து செல்வதினின்று இது புலனாகும்.

லறிஞர்கள் கிரேக்க நெடுங்கணக்கிலுள்ள, முதல் மூன்றெழுத்துக்களைக் கொண்டு - ஆல்பா-கதிர்களென்றும், பீட்டா-கதிர்களென்றும், காமா-கதிர்களென்றும் பெயரிட்டு


  1. ரதர் போர்டு - Rutherford.