பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் # 3 }

அடைந்து அதன் வேதியற் பண்புகளே மாற்றிவிடுகின்றன. இவ்வாறு எல்லாக் கதிரியக்கத் தனிமங்களும் சிதைந்தழித்து வேறு தனிமங்களாக மாறுகின்றன. இவ்வாறு உண்டான தனிமங்கள் யாவும் கதிரியக்க முடையனவாகவே உள்ளன: இது தற்காலிகமாக அமைந்த பண்பே ஆகுல், இந்தத் தனி மங்கள் யாவும் பளுவான அணுக்களேயுடைய புரேனியம், தோரியம் போன்றவற்றிலிருந்து உண்டானவையே. இவ் வாறு படிப்படியாக ஆல்பா-துணுக்குகளே இழந்துகொண்டே e உட்கருக்களின் பொருண்மைகள் கயத்தின் பொருண்மை அளவுக்குக் குறைந்து இறுதியாக அனுமனடை 203-ஐக் கொண்ட ஈயமாகவே மாறிவிடுகின்றன. ஈயம் நிலத்த தன்மையுடையது; அது கதிரியக்க முடையதன்று. ஈயத்தைவிடக் குறைந்த அணு - எடையைக் கொண்ட எந்த அணுக்களும் கதிரியக்கமுடையனவாக இல்லே, இதற்கு ஒரு சில விதி விலக்குகளும் இருக்கலாம்.

இத்தகைய தகவல்கள் யாவும் அணுக்கள் பக்குவிடுதல் என்ற கிரியை அறிவியல் அரங்கிற்கு வந்த பின்னர்தான் நமக்குத் தெரிந்தன. இயல்பாக அமைந்திருக்கும் கதிரியக் கத் தன்மையே பளுவான அணுக்களில் ஆற்றல் அடர்ந்து தேங்கிக் கிடக்கக் காரணமாக வேண்டும் என்றும், அந்த ஆற்றலின் காரணமாகவே ஆற்றல் வாய்ந்த கதிர்கள் வீசப் பெறுகின்றன என்றும் நமக்குப் புலனுகச் செய்தது. இந்த முறையில் பார்த்தால் கதிரியக்கத்தின் விளக்கமே பக்கு விடுதலைக் காண்பதற்கு வழியமைத்துத் தந்தது என்று சொல்லலாம்.

பளுவான தனிமங்கள் : அணுக்கள் வெடிப்பதற்குரிய சரியான காரணம் என்ன என்பது இன்னும் புலனுகவில்லை. மிகப் பளுவான தனிமங்களின் உட்கருக்களில்தான் வெடித் தல் நிகழ்கிறது. அணு - எண் 82-க்கு மேற்பட்ட அணு - எண்களைக் கொண்ட தனிமங்களில்தான் உட்கரு ஆட்டம் கொடுக்கத் தொடங்குகிறது. அணுக்களுள் பரிதியமாக அமைந்த அணுக்கட்டே வலிவான கட்டாகும். அதற்கு மேலுள்ள அணுக்கட்டுக்கள் அவ்வளவு வலு