பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

வளர்ச்சிக் கழகம் கண்டு கலைக்களஞ்சியம் உருவாக்கிய மேதை. தமிழ்நாட்டு இளைஞர்கட்கு அன்னார் காட்டிய பாதையில் பணியாற்றிவரும் எண்ணற்ற இளைஞர்களுள் சிறியேனும் ஒருவன். அத்தகைய பெரியாரிடம் யான் கொண்டுள்ள அன்புக்கு அறிகுறியாக இந்நூலைச் சமர்ப்பணம் செய்கின்றேன். அவர் ஆசியால் இந்நூல் தமிழ் மக்களிடையே பெருமிதத்துடன் உலவும் என்பது என் நம்பிக்கை.

காலத்திற்கேற்ற அரிய தமிழ் நூல்களே வெளியிட்டு நீண்ட நாட்களாகத் தமிழ்ப்பணியாற்றிவருகிறவர்கள் திருவாளர்களான எஸ். ஆர். சுப்பிரமணியபிள்ளை பதிப்பகத்தார். அவர்கள் இந்நூலை மனமுவந்து ஏற்று அழகுற அச்சிட்டு உதவியமைக்கு என் மனமுவந்த நன்றி என்றும் உரியது.

எனக்குள்ள பலவகையான குறைகளால் இப்புத்தகத்தில் பலவித குறைபாடுகள் ஏற்பட்டிருத்தல் கூடும். அறிஞர்களும் அன்பர்களும் அவற்றைப் பொறுப்பார்களாக. அவர்கள் குறைபாடுகளைச் சுட்டியுரைப்பார்களாயின் அடுத்த பதிப்பில் அவற்றைத் திருத்திக்கொள்வேன். இப் புத்தகத்தை எழுதி வெளியிடுவதற்கு யான் மேற்கொண்ட முயற்சியை நிறைவேற்றிவைத்த எல்லாம் வல்ல திருவருளை வாழ்த்தி வணங்குகின்றேன்.

{{block_center|

”குற்றம் களைந்து குறைபெய்து வாசித்தல்
 கற்றறிந்த மாந்தர் கடன்.”


அழகப்பா பயிற்சிக் கல்லூரி, இங்ஙனம் காரைக்குடி ந. சுப்புரெட்டியார் 23-7-58