பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮器4 அணுவின் ஆக்கம்

பொது இயல் மின்னிகளும் ஒன்றையொன்று கவரும் ஆற்றலே மிகவும் அதிகமாக இருக்கின்றது. இக்கருத்து நியாயமானதுதான் என்பது இருநியின்' அமைப்பு வலி யுறுத்துகிறது. இருநியில் ஒரு நேர் இயல் மின்னியும் ஒரு பொது இயல் மின்னியுமே இருக்கின்றன. அவ்விரண்டையும் இகணக்கும் ஆற்றல் மிகப்பெரியது.

இந்த மூன்று அம்சங்களையும் துணைகொண்டு கதிரியக் கத்தை ஒருவாறு விளக்கலாம். இயன்றவரை எத்தனை நேர் இயல் மின்னி - பொது இயல்மின்னி சோடிகள் அமைய, முடியுமோ அத்தனை சோடிகள் அமைகின்றன. இந்த சோடி களைக் கொண்ட தொகுதியே அணுவின் உட்கருவாகும். ஆகவே, அதன் அனு-எடை அதன் அணு-எண்ணுக்கு இரட்டிப்பாக இருக்கிறது. துணுக்குகளின் எண்ணிக்கை அதிகமாகும்பொழுது சிறு இடத்தில் நேர் இயல் மின்னிகள் அதிகமாக நெருங்குகின்றன. அவற்றினிடையே மின்சார எதிர்ப்பு ஏற்படுகின்றது. ஆகையால், சில நேர் இயல் மின்னி கள் வேறு சில நேர் இயல் மின்னிகளுடன், கலாம் விளத்துக் கொண்டு அவற்றை வெளியே அகற்ற முயலுகின்றன. எனவே, நேர் இயல் மின்னிகளும் பொது இயல் மின்னிகளும் சமமாகவுள்ள கூட்டத்தைவிட நேர் இயல் மின்னிகளே விட அதிகமான பொது இயல் மின்னிகளைக் கொண்ட ஒரு கூட்டம் நிலைத்த தன்மையாக இருக்கும். கலாம் விளேத்துக் கொள்ளாது சமாதானமாக இருக்கப் புத்திமதிகூறும் நடுவர் களேப் போல் பொது இயல் மின்னிகள் இருக்கின்றன. எனவேதான், எடை மிக்க தனிமங்களில் காணப்படும் தேர் இயல் மின்னிகளின் எண்ணிக்கையைவிட அவற்றி லுள்ள பொது இயல் மின்னிகளின் தொகை அதிகமாக இருக்கின்றது.

82-க்கு மேல் அணு-எண்களைக்கொண்ட தனிமங்களில் என்ன நிகழ்கிறது என்பதை ஈண்டு காண்போம். ஒன்ருே டொன்று கலாம் விளேத்துக் கொள்ளும் நேர் இயல் மின்னிக ளிடம் அமைதியை நிலைநாட்டப் பொது இயல் மின்னிகளால்

  • @65 fi - deuteron.