பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்க ஓரிடத்தான்கள்

138


அரசியல் சட்டங்களோ பொருளாதார நிபந்தனைகளோ அதனைத் தீர்மானிக்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் சில நன்மைகள் விளையட்டும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்க வேண்டியதுமில்லை.

ஓரிடத்தான்-விளக்கம் : ஒரிடத்தான் என்பது என்ன? பேரறிஞர்கள் தந்த விளக்கத்தாலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை என்னால் விளங்க வைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஓரளவு முயன்று பார்க்கிறேன். ஓரிடத்தான் என்பது அணுவில் ஒரு வகை; ஒரே தனிமத்தில் அடங்கியிருக்கும் அதன் அணுவின் ஒரு தனி வகையிலிருந்து எடையில் வேற்றுமையுள்ள மற்றொரு வகை, ஆனால், அணுவகைக்கு அணுவகை இவ்வாறு வேற்றுமை

படம் 20.

இருந்தபோதிலும் ஒரு தனிமத்தின் எல்லாவகை ஓரிடத்தான்களும் வேதியற் கிரியைகளில் முற்றும் ஒன்றுபோலவே செயல்புரிகின்றன. நீரியம், கார்பன் ஓரிடத்தான்கள் படத்தில் காட்டப் பெற்றுள்ளன (படம்-20). ஓரிடத்தான்களை