பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்க ஓரிடத்தான்கள்

143


யும். ஆனால், அது கதிரியக்கமுடையதாக இருந்தால் அதனைக் கைகர் எண்-கருவி15 என்ற கருவியின் மூலம் இனங்கண்டு கொள்ள முடியும். ஒரிடத்தானிலிருந்து உமிழப் பெறும் கதிர்கள் கைகர் எண்-கருவியின் மீது படுங்கால் 'கிளிக்’ என்ற ஓர் ஓசை உண்டாகிறது. அந்த ஓசையைக் கொண்டு ஒரிடத்தான் இருப்பை அறியலாம். இன்று நிமிடத்திற்கு 10,000 வரை எண்ணிக் காட்டக்கூடிய கருவியும் கண்டறியப் பெற்றிருக்கின்றது.

ஓரிடத்தான் - குறியீடு: அணுவின் உட்கருவினுள் இருக்கும் துணுக்குகளின்16 எண்ணிக்கையைக் கொண்டே ஓரிடத்தான் குறியீடு செய்யப்பெறுகின்றது. நீரியம்-1 என்றால் நீரியக் கருவில் ஒரு துணுக்கு இருக்கிறது என்பது பொருள்; நீரியம்-2, நீரியம்-8 என்பவற்றில் முறையே இரண்டு, மூன்று துணுக்குகள் இருக்கின்றன என்று கொள்ள வேண்டும். (படம்-20ஐப் பார்க்க). இதே குறியீட்டின்படியே உயிரியியம் - 16, 17, 18 என்றும், யுரேனியம் - 233, 234, 235, 238 என்றும் குறியிடப் பெறுகின்றன. இவற்றுள் யுரேனியம் - 235 மட்டிலுந்தான் மிகவும் கவர்ச்சிகரமானது. காரணம், பக்குவிடச் செய்வதற் கேற்றவாறு அணு அமைப்பினைக் கொண்டுள்ள இயற்கையில் கிடைக்கக் கூடிய ஒரே பொருள் அதுதான். யுரேனியம் - 233ம் பக்குவிடக் கூடியது 17தான் ; ஆனால், அது புளுட்டோனியத்தைப் போலவே செயற்கை முறையினாலானது.

இவ்விடத்தில் அணுவினுள் இருக்கும் துணுக்குகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுதல் இன்றியமையாதது. ஓர் அணுவின் உட்கருவினுள் நேர்இயல் மின்னிகளும் பொது இயல் மின்னிகளும் அடங்கியுள்ளன என்றும், அவைதாம் அணுவின் எடைக்குக் காரணமாகவுள்ளன என்பதையும் முன்னர்க் கண்டோம். ஓர் உட்கருவினைச் சுற்றியுள்ள எதிர் மின்னிகள் தாம் அவ்வணுவின் வேதியற்கிரியைகளில் செயற்படுகின்றன என்பதையும், அதுவும் வெளிப்புறமாகவுள்ள


15கைகர் எண்-கருவி- Geiger counter.
16துணுக்கு-particle. 17பக்குவிடக் கூடிய-fissionable.