பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிரியக்க ஓரிடத்தான்கள்

145


மின்னியின் எடையும் சமம் என்று அறிவியலறிஞர்கள் கணக்கிட்டிருக்கின்றனர்.

சாதாரணமாக இருக்கவேண்டிய விகிதத்திற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொது இயல் மின்னிகள் இருந்தால், அது அத்தனிமத்தின் அனுக்கருப் பண்புகளை மாற்றுகின்றன; ஆனால், அதன் வேதியல் தன்மையை மாற்றுவதில்லை. இந்தச் சமன்பாடின்மை போதுமான அளவு இருந்தால், அந்த அணுக்கரு நிலையற்றதாகிவிடுகின்றது; அது நிலையான மாற்ற நிலையை18 அடையும் வரை கதிர் வீசல்19 நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. கார்பனின் அணுக் கருக்களைப் பொறுத்த வரையில், கார்பன்-12, கார்பன்-13 மட்டிலுந்தான் நிலையானவை. கார்பன்-10லும் கார்பன்-11 லும் ஒரு சில பொது இயல் மின்னிகள் மட்டிலுமே இருப்பதால், அவை நேர் மின்னிகளே20 வெளிவிட்டு முறையே போரான்21 - 10 ஆகவும் போரான் - 11 ஆகவும் மாறுகின்றன. ஆனால், கார்பன் - 14ல் அதிகமான பொது இயல் மின்னிகள் இருப்பதால் அது நிலைத்த தன்மையைப் பெற்றுவிடுகின்றது; அது எதிர் மின்னிகளை வெளிவிட்டு நைட்ரோஜென் - 14 ஆக மாறுகின்றது.

ஓரிடத்தான் வகைகள் : ஒரிடத்தான்களில் இருவகை உண்டு. அவற்றுள் ஒருவகை நிலைத்த தன்மையுடையவை. இவற்றின் ஒரு பகுதி சிதைந்தழித்து நாளடைவில் நிலைத்த தன்மையைப் பெறுகின்றது. மற்றொரு வகை நிலையற்றவை; இவற்றைக் கதிரியக்கமுள்ள ஓரிடத்தான்கள் என்றும் வழங்குவர். கதிரியக்கமுள்ள தனிமங்களைத் தவிர, ஏனைய இயற்கைத் தனிமங்கள் பெரும்பாலானவற்றிலும் முதல் வகையைக் காணலாம். இரண்டாம் வகையை இயற்கையில் காண்பது அரிது. அவை யுரேனியம் போன்ற கனமான தனிமங்களிடத்தில் மட்டிலுந்தான் காணப்படும். 1934 ஆம் ஆண்டிலிருந்து பிரெடெரிக் ஜோலியட்22 என்பாரும்


18 நிலையான மாற்ற நிலை-stable configuration. 19கதிர் வீசல்-radiation. 20நேர் மின்னி-positron. 21போரான்-boron. 22பிரெடெரிக் ஜோலியட்-Frederick Joliot.
53–11