பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

அணுவின் ஆக்கம்


நமக்கு மிகவும் பழக்கமுடையது யுரேனியம்-235 என்பது. இதுதான் அணுகுண்டின் தாய் , அணுவாற்றலை முதன் முதலாக வெளிப்படுத்தக் காரணமாக இருந்த பொருள்.

ஓரிடத்தான்கள் - உற்பத்தி : ஒரிடத்தான்கள் எவ்வாறு உண்டாக்கப் பெறுகின்றன? எந்த அணுக்கருவினையும் பொது இயல் மின்னிகள், நேர் இயல் மின்னிகள், ஆல்பா-துணுக்குகள், இருநி ஆகிய துணுக்குகளால் தாக்கினால், ஓர் எதிர்வினை34 உண்டாகி அதனால் வேறுபட்ட ஒரு அணுக்கரு உண்டாகக்கூடும். (படம் - 22). முதன்

முதலாக 1980-ல் தான் அணுவினைச் சிதைக்கும் அரக்கப் பொறிகளாம் சுழலினிகளில் இத்துணுக்குகளைச் செலுத்தி இயக்கி செயற்கை முறையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் உண்டாக்கப் பெற்றன. இக்காலத்தில் அணு அடுக்குகளில் ஏராளமான பொது இயல் மின்னிகள் கிடைக்கின்றன. பெரும்பாலான ஓரிடத்தான்கள் இவ்வணு அடுக்குகளிலேயே உற்பத்தி செய்யப்பெறுகின்றன. அணுக்கரு எரியைகளைப்35 பிளவுறச் செய்யும் அணு உலைகளில் உடன் விளைவுப் பொருள்களாகக் கிடைக்கும் ஓரிடத்தான்களால் சிறிதும் பயன் இல்லை. காரணம், கலவைகளாகக் கிடைக்-


34எதிர்வினை- reaction. 35 அணுக்கரு எரியை - nucdear fuel.