பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்க ஓரிடத்தான்கள்

151


கும் ஓரிடத்தான்களினின்றும் பயனுள்ள கதிர்களையும் நீண்ட அரை-வாழ்வுகளையும் கொண்ட ஓரிடத்தான்களைப் பிரித்தெடுப்பதில் மிக்க சிரமம் இருக்கிறது; கட்டுக்கடங்காத பொருட் செலவும் ஏற்படுகிறது. ஆனால், அவை குறைந்த செலவில் பிரித்தெடுக்கப் பெற்றுத் தூய்மையாக்கப் பெற்றால் அவற்றால் இன்றியமையாத பயன்கள் உண்டு. இன்று அணு உலைகள் எங்கனும் பெருவழக்காக இருப்பதால் ஓரிடத்தான்களைத் தூய்மையாக்குவதற்கு அதிகப் பொருட் செலவில்லாத முறைகள் தோன்றுதல் கூடும்; ஓரிடத்தான்களின் விற்பனை தொழிற்சாலைக்கு அதிகப்படியான வருமானத்திற்கு ஒரு மூலமாகவும் அமைகின்றது. அமெரிக்க ஐக்கிய நாட்டு அணுவாற்றல் குழுவின்36 ஆதரவில் நடைபெறும் ஸ்டான் போர்டு ஆராய்ச்சி நிலையத்தில்37 நடைபெற்ற ஆராய்ச்சியினால் மாசுள்ள பிளவுற்ற உற்பத்திப் பொருள்கள்38 குயூரி ஒன்றுக்கு 0.02 டாலரிலிருந்து (2 சென்டுகள்) 2 டாலர் வரையிலும் விலைக்குக் கிடைக்கச் செய்யலாம் என்று மதிப்பிடப் பெற்றிருக்கின்றது. 'குயூரி' என்பது கதிரியக்கக் கிளர்ச்சியில் கொள்ளப்பெறும் ஒரு புதிய அளவு. 100,000 டாலர் விலேயுள்ள ஒரு கிராம் எடையுள்ள ரேடியத்தினால் உண்டாகும் கதிர்வீசல் அளவினைக் குறிக்கும் அளவு இது. அன்றியும், அதே ஆராய்ச்சியால் பிரித்தெடுக்கப்பெற்றுத் தூய்மையாக்கப் பெற்ற தனி ஓரிடத்தான்களே குயூரி39 ஒன்றுக்கு ஒரு டாலரிலிருந்து 100 டாலர் வரை விலை மதிப்புள்ளதாக உற்பத்தி செய்யலாம் என்றும், ஒரு பவுண்டு (இராத்தல்) மாசுள்ள அணு உலைப்பொருள்40களிலிருந்து 30,000 குயூரிகள் கிடைக்கும் என்றும் கண்டறியப் பெற்றிருக்கின்றது. இந்த விலையில் அவற்றைத் தொழில் துறையிலும் வணிகத் துறையிலும்


36அமெரிக்க ஐக்கிய நாட்டு அணுவாற்றல் குழு-U. S. Atomic Energy Commission.37ஸ்டான் போர்டு ஆராய்ச்சி நிலையம்-Stanford Research Institute. 38மாசுள்ள பிளவுற்ற உற்பத்திப் பொருள்கள்-impure fission products. 39குயூரி-curie. 40 மாசுள்ள அணு உலைப்பொருள்-impure reactor material.