பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

அணுவின் ஆக்கம்


விலையில் 20 சதவீதத்திற்குத் தருகின்றனர். கதிரியக்கமற்ற (நிலையான) ஓரிடத்தான்களும் வேறு இயந்திர அமைப்பைக் கொண்டு ஓக் ரிட்ஜ் என்னுமிடத்தில் உற்பத்தி செய்யப்பெறுகின்றன. அவை கதிரியக்கமுள்ள ஓரிடத்தான்களைப் போல் கூரிய உணர்வுடையனவாக49 இராவிடினும், ஓரிடத்தான்களே இல்லாத தனிமங்களின் சில ஆராய்ச்சிகளில் பயன்படுகின்றன. 1946லிருந்து 2000க்கு மேற்பட்ட கப்பல்பார நிலையான ஓரிடத்தான்கள் அனுப்பப்பெற்றுள்ளன.

ஒர் அணு உலை மூன்று முறைகளில் கதிரியக்க ஓரிடத்தான்களை உண்டாக்குகிறது. அணுக்கரு, எதிர்வினை முழுவதிலும் ஏராளமாகச் சுழலும் பொது இயல் மின்னிகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அணு உலையில் வைத்து தாக்கப்பெறும் தனிமங்களின் அணுக் கருக்களால் பொது இயல் மின்னிகள் கவரப்பெற்றால்50 அதே தனிமத்தின் கனமான ஓரிடத்தான்கள் உண்டாகின்றன. பொது இயல் மின்னிகள் அணுக்கருக்களைத் தாக்கி அவற்றிலிருந்து துணுக்குகளை வெளியேற்றினால், வேறொரு தனிமத்தின் ஒரிடத்தான்கள் உண்டாகின்றன. பொது இயல் மின்னிகள் யுரேனியம்-235 இன் அணுக் கருக்களைத் தாக்கினால் அக்கருக்கள் இரண்டாகப் பிளவுற்று ஒவ்வொன்றும் இலேசான தனிமத்தின் கதிரியக்க ஒரிடத்தான்களாக மாறுகின்றன. இறுதியில் கூறப்பெற்ற முறையிலுண்டாகும் கதிரியக்க ஓரிடத்தான்கள் பக்குவிடும் பொருள்கள்51 என வழங்கப்பெறுகின்றன. இங்ஙனம் உற்பத்தி செய்யப் பெற்று அணுவாற்றல் குழுவினால் வினியோகம் செய்யப்பெறும் ஓரிடத்தான்களின் பயன்களைப் பின்வரும் அத்தியாயங்களில் காண்போம்.


49கூரிய உணர்வுடைய - sensitive.50கவருதல் - absorb.51பக்குவிடும் பொருள்கள்-fission products.