பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

அணுவின் ஆக்கம்


பெற்றதாகவும், விளங்குகின்ற மின்னி ஒன்று உண்டு என விளங்கியது. இதுவே நேர் மின்னி10 எனப்படுவது. இவ்வாறே சில ஆண்டுகளுக்கு முன்னர் எதிர் இயல் மின்னிகள் தோன்றின. இவை எதிர் மின்னூட்டம் பெற்றவை. ஆனால், அவ்வளவு கனமுடையவை அல்ல. கீழ்நாட்டு ஜப்பானியர் இவற்றைக் கண்டார் என்று முன்னர்க் கண்டோம். இவ்வாறு எத்தனையே உண்மைகளை வில்சன் மேக அறை நமக்குப் புலனாக்கி அணுவின் கதையத் தொடர்ந்து தெள்ளத் தெளிய அறிய உதவுகின்றது.

மின்காட்டி : மின்காட்டி11 அணு பெளதிகத்தின்12 மிகப் பழைய ஆய்கருவி. இது மிகப் பழைய காலத்திலிருந்து

மின் காட்டி
படம் 24

மின்சாரத்தை அளக்கவும் பயன்பட்டு வருகின்றது. இது தரும் செய்தி பழைமையுடையதாக இருந்தாலும், அது எளிதாகவும், நம்பத்தக்கதாகவும், சரியாகவும் இருக்கின்றது.


10நேர் மின்னி-positron.11மின்காட்டி-electroscope.12அணு பெளதிகம்-nuclear physics.