பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

161


இந்த மின் காட்டி இவ்வாறு அமைந்திருக்கின்றது : மேலே ஒரு தட்டு. அதிலிருந்து ஒர் உலோகத் தண்டு நீண்டு இருக்கிறது. (படம்-24). அந்தத் தண்டின் முனையில் இரண்டு பொன் இதழ்கள் அமைக்கப்பெற்றுள்ளன. தட்டு நீங்கலாக இவை அனைத்தும் மின்சாரம் புகமுடியாத கண்ணாடிப் புழைக்குள் இருக்கும். இதில் பொன் இதழ்கள் இருப்பதால் இதனைப் பொன் இதழ் மின்காட்டி13 என்றும் வழங்குவர்.

இக்கருவி எவ்வாறு வேலை செய்கிறது ? நேர் மின்னூட்டமோ எதிர் மின்னூட்டமோ இந்தத் தகட்டில் பாயும் பொழுது அவ்வூட்டம் தட்டிலிருந்து தண்டு வழியாகப் பாய்ந்து பொன் இதழ்களுக்கு அவ்வூட்டத்தை ஏற்றும். இரு இதழ்களும் ஒரே விதமான ஊட்டத்தைப் பெறும். இயற்கை விதிப்படி ஒரே விதமான மின்னுாட்டம் ஒன்றையொன்று வெறுத்துத் தள்ளும். எனவே, இவ்விதழ்கள் ஒன்றனையொன்று வெறுத்து ஒடுவதே இதழ் விரிவாகத் தோன்றுவதற்குக் காரணமாகின்றது.

மின்னூட்டம் பெற்ற கம்பியைக் கொண்டு அத்தண்டு ஒருக்கணம் தொடப்படுகிறது. என்ன நிகழும்? இதழ்கள் விரிகின்றன. ஒரேவித மின்னூட்டம் அவற்றை வெறுத்தோடச் செய்கின்றன. தண்டருகே அயனியாக்கும் மூலம் ஒன்றும் இல்லாதிருந்தால் தண்டு பல மணி நேரம் மின்னுட்டத்துடனேயே இருக்கும். ஆனால், புழையினுள்ளிருக்கும் காற்று அயனி நிலையை அடைவதால், அக்காற்று உள்ள இடைவெளி முழுவதும் மின்சாரப் போக்கி14 நிலையைப் பெறுகின்றது. ஒரு சமயம் தண்டு நேர்மின்னூட்டம் பெற்று இருப்பதாகக் கருதுவோம். இப்பொழுது எதிர் மின்னூட்ட அயனிகள் அதனை நோக்கி நகரும் ; நேர் மின்னூட்ட அயனிகள் புழையின் சுவரை நோக்கிப் பாயும். இதன் விளைவாக, தண்டிலிருந்த மின்சாரம் குறைந்து


13பொன் இதழ் மின்காட்டி-Gold-leaf electroscope. 14மின்சாரப் போக்கி-Conductor.
53–12