பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

அணுவின் ஆக்கம்


வடிவத்தில் நம் கண்ணால் காணமுடிகின்றது. இக்கருவியுடன் ஒர் ஒலிபெருக்கி அமைப்பினைப் பொருத்தினால் மின் துணுக்கு செல்லுவதைப் பட்டென்று ஒலிக்கும் சுடர்

கைகர் முல்லர் எண்-கருவி : விளக்கப்படம்
படம் 25 ஆ

ஒலியினால் கேட்கவும் முடிகிறது. ஒலிபெருக்கி அமைப்பிற்குப் பதிலாக எண்-கருவி ஒன்றனை அமைத்து துணுக்குகள் எத்தனைமுறை ஓடின என்பதை எண்ணியும்

கைகள் முல்லர் எண் கருவியும்-கணக்கெண்ணியும்
படம் 25 இ

அறியலாம். தொலைபேசியில்19 எத்தனை முறை பேசினோம் என்பதை இயந்திரமே இப்பொழுது கணக்கிடுவதுபோல இக்கருவியிலும் துணுக்குகளை இயந்திரமே எண்ணிக்-


19தொலைபேசி-telephone.