பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அணுவின் ஆக்கம்


துணி கோண்டு கண்ணாடிக் குழாயைத் தேய்த்தால் எழுகின்ற மின்சாரம் போன்றது அது. அடியிற் காட்டப் பெற்றுள்ள படம் இக்கருவியின் அமைப்பை நன்கு விளக்கும். (படம்-28).

இந்தக் கருவியின் நடுவில் மேலும் கீழுமாய் ஒடும் முடிவில்லாத பட்டையான பெல்டு ஒன்று இருக்கிறது. அது உலர்ந்த பட்டுப்போன்ற அரிதில்-கடத்தியால் இயற்றப்பெற்றது.

வான்-டி-கிராப் நிலை இயல் மின்னாக்கி
படம்-26

இந்தப் பெல்டிலே மின்சாரத்தை ஏறச் செய்ய முடியும். இதன் மேல்-கோடி ஒர் உலோகக் கோளத்தின் உள்ளே பொருந்தியிருக்கின்றது. பெல்டு சுற்றும்பொழுது அதில் ஏறிய மின்சார ஏற்றங்களைக் கோளத்தின் உட்புறமாக அது எடுத்துச் செல்கிறது. அங்கு அது கோளத்தில் பொருந்தும்படி மின்சார ஏற்றங்களைக்கொட்டிவிடுகின்றது ; கோளத்தில் மின்சாரம் திரள்கிறது.