பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

171கருவியின் அமைப்பு: வெற்றிடமாக்கிய ஒரு பெரிய அறை. அதில் அரை வட்டமாகவுள்ள இரண்டு மின் வாய்கள் உள்ளன. அவை ஆங்கில எழுத்தாகிய D யைப் போல் இருப்பதால் அவை 'டீக்கள்' என்றே வழங்கப் பெறுகின்றன. (படம் 27). இரண்டு பகுதிகளுக்கும் இடையே

இ. ஒ. லாரென்ஸ் சுழலினி

ஒரு சில அங்குலம்தான் இடைவெளி இருக்கும். இந்த இரண்டு 'டீக்களும்' அதிக அதிர்வு உடைய இரு திசையோட்ட மின்னாக்கியுடன் பிணைக்கப் பெற்றிருக்கும்.

கவர்ச்சியால் வட்ட ஒட்டம் : அந்தப் பெட்டி ஆற்றல் வாய்ந்த காந்தப் புலத்தின் ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப் பெறும். அத்தகைய புலத்தில் மின்னூட்டம் பெற்ற-